பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 திருக்குறள் சொற்பொருள் சுரபி

உரை ஆசிரியர் :- பெறத்தக்கது அறிவு என்று நான் உண்மை உரை கூறினேன். அதனால் கடவுள் ஒருவர் உண்டு என்று ஆய்விடாது. அப்படி ஆய்விடுமானால் ஆய்விடட்டும். அதனால் உமக்கென்ன முழுகிப் போகும்?

ஆத்திகன் :- மக்கள் பெறத்தக்கது அறிவு என்று மட்டும் கூறிய நீவிர் அறிவாகிய கடவுள் என்று ஏன் கூறவில்லை?

உரை ஆசிரியர் :- கடவுள் என்ற சொல் மக்கள் அறிவு பெறாத காலத்தில் ஏற்பட்டதாய் இருக்கலாம். கடவுள் - கடந்தது; அறிவுக்கு எட்டாதது என்று அதன் பொருளையும் நோக்குக. எட்டாத ஒன்றுக்குப் பெயர் எப்படி எட்டியிருக்கும்? இவைகளைக் கருதியன்றோ வள்ளுவர் தம் நூலில் கடவுள் என்ற பெயரையே எடுத்தாளாது விட்டார்.

நாத்திகன் :- சாங்கியம் என்பது ஒரு மதமா? உரை ஆசிரியர் :- இல்லை. தமிழர்பால் தொன்று தொட்டு இருந்து வரும் பண்பாடு. இடையில் திருவாரூர் கபிலர் எண்ணுால் என்ற பெயரால் நூலாக இயற்றியருளினார்.

நாத்திகன் :- அந்தப் பண்பாடுகளை அடிப்படையாகக் கொண்டே அக்கால நூல்கள் உண்டாகும் என்பதை விளக்க முடியுமா?

உரை ஆசிரியர் :- மேல் என்றால் வானத்தை நோக்கி அண்ணாந்து பார்ப்பது இந்நாள் வழக்கம். இந்நாளில் ஏற்படும் நூற்களும் அதை அடிப்படையாகக் கொண்டுதான் உண்டாகும். கீழ்ப் புறத்திற்கும் மேல் என்பது பொருந்தும் என்று கொண்டு கீழ்நோக்கார். அதுபோலவே அக்காலத் தமிழர்கள் இந்த உலகம் என்றைக்கு உண்டானது என்று ஆராய்வது பயனற்ற வேலை என்பார்.

உலகம் ஆதியினின்று முதன்மையினின்று தோன்றிற்று என்றார்? அந்தக் கருத்தின், பண்பாட்டின் அடிப்படையில்தான் அக்கால நூற்களும் அமைந்தன. உலகம் ஒருவனால் உண்டாக்கப்பட்டது என்பதை அடிப்படையாகக் கொண்டு நூல் அமையாது. இதுதான் சாங்கியத்தின் அடிப்படையில் குறள் உண்டாயிற்று எனப்பட்டது. சாங்கியம் மதமன்று. அது எவராலும் உண்டாக்கப்பட்டது அன்று. அக் கருத்துக்களின் தொகுதியே எழுத்தாக்கிளவி எனப்பட்டது. எழுதிய பின் எண்ணுல் எனறாாகள.

எண்ணுல் பல மொழியில் பெயர்க்கப்பட்டது. ஆரியர் - திபேத்தியர் முதலியவர்களால் பலவாறு திரித்து எழுதப்பட்டது. சாங்கிய கருத்துக்கள் இயற்கையோடு இயைந்தவை. பகுத்தறிவுக்கு ஒத்தவை. ஆதலால்தான் அக்கருத்துக்கள் தத்துவ நூற்கள் என எழுந்த அனைத்திற்கும் அடிப்படையாகி மிளிர்கின்றன.

மதம், சமையம் என்று சொலலப்படுவன அனைத்தும் ஒருவனால் ஒரு கொள்கையை நோக்கி மக்களை இழுக்க உண்டாக்கப்படுவன. சாங்கியம் - கருத்துக்கள் - பண்பாடுகள் எவராலும் - எவரை தம் பக்கம்