பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 221

இழுக்கவும் ஆக்கப்பட்ட்ன அல்ல என்பதை உணர்வார். அதை மதம் என்றார் என்பதை நீவிர் இங்கு நினைவிற் கொள்க.

ஆத்திகன் :- எழுத்தெல்லாம் அகரத்தை முதலாகக் காரணமாகக் கொண்டவை. அதாவது அகரத்தனன்றே மற்ற எழுத்துக்கள் உண்டாயின. இது பெரியோர் கொள்கையல்லவா?

உரையாசிரியர் : எழுத்துக்கள் அனைத்தும் ஓம் என்றதினின்று தோன்றியவை என்று விளக்கிய மாணிக்க நாயக்கர் சிறியோரா? அன்றியும், அ. முதல் ஒள வரைக்குமுள்ள உயிர்கள் பன்னிரண்டு. அவற்றில் ஓர் எழுத்திலிருந்து மற்றவை தோன்றின என்பது எப்படிப் பொருந்தும்? காலில் விலங்கும் கையில் விலங்கும் உடல் மறைய ஒரே வகைச் சட்டையுமாய்ச் சிறையில் இருக்கும் பன்னிரண்டு குற்றவாளிகளில் ஒருவன் மற்றவரை ஆக்கினான் எனில் அதற்கு என்ன அடையாளம்? என்ன ஆதாரம்? சொல்லத்தான் வேண்டும் என்று மதமக்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவையெல்லாம் ஊற்றுக்கு நிற்காது.

ஆத்திகன் :- எழுத்துகளில் நான் அகரமாய் இருக்கிறேன் என்று கண்ணபிரானே சொல்லவில்லையா?

உரை ஆசிரியர் :- ஆமாம், கண்ணபிரான் மக்களை இருட்டில் வருக என்று அழைக்கிறான். நாம் ஏன் போக வேண்டும்? வள்ளுவரைப் பின்பற்ற வேண்டுவது வையத்தின் கடனள்றோ?

ஆத்திகன் : இந்த அதிகாரத்திற்கு கடவுள் வாழ்த்து என்று இருந்ததை நீவிர் உலகின் தோற்றம் என்றது என்ன?

உரை ஆசிரியர் :- இதுதான் வள்ளுவர் உள்ளம். கடவுள் வாழ்த்து இடையில் ஏற்பட்ட வேலை.

நாத்திகன் :- முதல் நான்கு அதிகாரங்கள் வள்ளுவர் அருளிச் செய்தனவா?

உரை ஆசிரியர் :- இல்லை என்று வ.உ.சிதம்பரனார் எண்ணுகின்றார். நான் அவ்வாறு எண்ணவில்லை. உரை முழுவதும் நீர் படித்தபின் நான் சொல்லுவது உண்மை என்று உமக்கே தோன்றலாம். (குயில் 1.12.59)

ஆத்திகன் :- உலகு பகவன் முதற்று என்பதன் பொருளைத் தெளிவுப்படுத்த முடியுமா?

உரை ஆசிரியர் - உலகு - உலகினர் பகவன் முதற்று - பகவனை முதன்மையாகக் கொள்ளத்தக்கவர். இங்கு முதன்மை என்பது காரண முதன்மையன்று. இடமுதன்மை. எனவே அறிவை உலக மக்கள் முதலிடத்ததாக கொள்ளத் தக்கவர். மக்கள் பெறத்தக்கது அறிவே ஆகும் என்றாம். அறிவு ஒன்றை ஆக்கத்தக்கதன்று. எவற்றிற்கும் மேலானது; சிறந்தது; பெறத்தக்கது என்க. (குயில் 8.12.59)

- புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்