பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளுக்கு உரை எழுதிய பதின்மர் யார்?

உலகத் தமிழ் மறையாக விளங்கி வரும் வாழ்வியல் நூல் திருக்குறளுக்குப் பழைய உரைகாரர்கள் பதின்மர் இருந்தார்கள். அவர்கள் : தருமர், மணக்குடவர், தாமத்தர், நச்சர், பரிமேலழகர், பருதியார், திருமலையர், மல்லர், கவிப்பெருமாள், காளிங்கர் என்று கூறுவர்.

இந்தப் பத்து உரைகளுள், தற்போது மக்களிடையே உரை பவனியாக மனவலம் வருவது பரிமேலழகர், மணக்குடவர், பரிதியார், காளிங்கர், பரிப்பெருமாள் ஆகியோரது உரைகளே! மற்ற உரைகள் நிலை தெரியவில்லை.

பரிமேலழகர் என்பவர், காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோயில் பூசாரியாக இருந்த பார்ப்பனர் என்பர். இவரது உரைதான் இன்று சிறந்த உரையாகக் கற்றோரால் போற்றப்படுகின்றது. அவருடைய வர்ணாசிரம வெறியை உரையினின்றும் நீக்கி விட்டால், திருக்குறளுக்கு அந்த உரைதான் மிகச் சிறந்த உண்ரயாகும். இவர் 'பரிபாடல் பாக்களுக்கும் உரை ត្ឌាអំ!

மணக்குடவர் உரை, கற்றார்க்கு ஐயம் நீக்கும் உரையாக வாழ்கின்றது. எனவே, அந்த உரையையும் நாம் படித்தால் சில உண்மை நிலைகள் நமக்குப் புரியும்.

தற்காலத்தில் பல உரைகள் வெளிவந்துள்ளன. அவை அவரவர் கொள்கைகளின் சார்புரைகளாக சரணம் பாடுகின்றன. இவைகட்கெல்லாம் பரிமேலழகர், மணக்குடவர், காளிங்கர், பரிதியார் போன்றவர்களே உரை வழிகாட்டிகளாக உள்ளார்கள்.

மேற்கண்ட உரைகளில் எது வள்ளுவர் பெருமானுடைய உள்ளம், சிந்தனை என்பதைக் காண முடியவில்லை. இலக்கியங்களில் தடுக்கி விழுந்தவன் எல்லாம் குறளுக்கு உரை எழுத முன்வந்ததே காரணம்.

நாவல் எழுதிக் கும்பி வளர்ப்போனென்லாம், திருக்குறளுக்கு எளிய உரை எழுத வந்ததால்தான், அழுக்காறு என்ற சொல்லுக்குப் பெருமை: என்று உரை கூறி பனம் தேடுகிறான். இதற்கு அந்த ஆள் எழுதிய உரை முதற்பதிப்பே சான்று! தமிழ் படியாதவனெல்லாம் பதிப்பகம் நடத்த வந்த அறிவுக்கேடு! என்ன செய்வது தமிழ் வளரும காலவினை அதைத் தமிழ் அனுபவித்து வருகின்றது! வாழ்க காலமறிதல்!.