பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி

23

அடுமுரண் = (567).

அடும் = கொல்லும், (207, 500,

799); வெல்லும், (495).

அடைக்கும் = தடுக்கும், (38, 71).

அடைக்கும்தாழ் = அடைத்து

வைக்கும் தாழ்ப்பாள், (7:1).

வெல்லும் வலி,

அடையாவாம் = சாராவாம், (939).

அட்டிய = வார்த்த, (1093).

அணங்கு = காம நோயால் உயிர் கொள்ளும் தெய்வப் பெண், (918), தெய்வப் பெண், (10.81).

அணங்குறுத்தல் = தலைமகள் அழகு துன்புறுத்தல், (109வது அதிகாரம்).

அணி - ஆபரணம், அழகு, (95);

அழகு, (115, 118, 738, 742, 1014, 1102); ஆபரணம், (701, 1089); அழகு, மலர்ச்சி, (1273). அணி இழை = அழகிய ஆபரண மணிந்த பெண். இது வினைத் தொகை. அணிதலையுடைய என வரும் வேற்றுமை தொகை. அது அன்மொழி ஆனாலும் சரி, ஆகு பெயரானாலும் சரி!.

அணிகலம் - அழகு, (575).

அணி நிழற்காடு = செறிந்த காடு; அழகிய நிழலை யுடைய வ்னம், (742).

அணியுமாம் = புனையும், அலங் கரிக்கும், பிறரின் தமக் கொரு மிகுதியை ஏற்படுத்திக் கொள் ளும்; தம்மைத் தாமே புகழ்ந்து சிறப்பித்துக் கொள்ளும், (978).

அனுகாது = கிட்டாது; நெருங்

காமல், (591). அண்ணாத்தல் = வாய் திறத்தல்,

(மணக்குடவர் இச் சொல்லிற்கு புறப்பட விடுதல் என்கிறார், (255).

அதர் = வழி, (594). அதற்கு = அந்தக் கல்விக்கு (391); அவ்வினை செய்தற்கு, (518); அந்த உரிமைக்கு (802) உயிருக்கு (1124), ஊருதற்கு, (1330). அதனால் = அது காரணமாக, (303,

642, 1031). அதனினும் =

(152, 1158). அதனின் = அதிலும் பார்க்க, (122, 302); அப்பொருளால், அதனளவு, (341}; அதனிலும் பார்க்க, (644, 1166). அதனை = அதை, (32, 77, 152, 262, 495, 517, 621, 859, 1141, 1143). அதனோடு = அதனுடன், (550). அதன் = அவை தமக்கு, (50); அதற்கு என, (323 490, 773);

அதை, (1038); அதனுடைய, (1289). அதி = மிக, (636).

ஆனால், ஒரு சிலர் 'அதி என்ற சொல் வடசொல் என்கிறார்கள். இதைத் தமிழ்ச் சொல் என்றே கூறவேண்டும். ஏனென்றால், அதிகாலை என்று கூறுகிறோம். அந்த அதி என்பது அது என்றும், சுட்டுப் பெயரடியாகப் பிறந்து 'மிக’ என்னும் பொருளைக் குறிக்கின்றது.

அதிலும் பார்க்க

இவை என்றது நணரியவற்றை: உவை என்றது அவற்றிற் சேய வற்றை; அவை என்றது அவற் றில் சேயவற்றை, (பரி. 40 உரை) மிகச் சேய்மையில் உள்ளது 'அதி எனபபட்டது.

இந்தப் பொருளிலிருந்து அதி என்பதற்கு மிகுதி என்னும் பொருள் வருதல் கூடும். வட