பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

மொழி தொடர்பான அடி வேறு வகையதாகும். அதிர = நடுங்கும்படி, (429). அது= அஃறினை ஒருமைச் சுட்டுப் பெயர், {36, 45, 74, 165, 231, 257, 278, 332, 333, 334, 362, 364, 452, 477, 533, 536, 570, 596, 901, 948, 985, 996, 1144, 1166, 1284, 1302, 1307) என்ற குறட்பாக்கள் 'அது' என்றே கட்டுகின்றன. அது உம் - அதும். அது என்னும் முற்றுகரத்தின் மேல் இழிவு சிறப்பும்மையின் உயிரேறி 'உம்' என நின்று, பிறகு செய் யுள் இசையை நிறைவிக்க

அளபெடுப்பதால் அது உம்' |

என நின்றது, (230, 546). அத்தல் = அதனால், (524). அத்து = சாரியை, {13); உலகத்து,

ஒழுக்கத்து, (21). - அத்தனர் அழகிய தண்ணளியை உடையவர்; உயிர்களிடத்துக் கருணை உடையவர் (30); அறவோர், துறவோர், (543). அந்தணன் = கடவுள், (8); மற்றும் சிலர் அறவோர், செந்தண்மை யுடையவர் என்றும் கூறுவர். குறிப்பிட்ட ஒரு சாதியைக் குறிக்காது. 'பார்ப்பார் என்றால் திருமறை பார்ப்பார், நாழிகை பார்ப்பார், நிமித்தம் பார்ப்பார்’ என்கிறார் நாவலர் தனது உரையில்.)

அத்திலை : (439). அந்நிலையே = அவ்வாறு செய் யாத நிலையில் நின்று; முன் பிருந்த நிலையிலேயே நின்று, (967).

அது நிற்குமளவில்,

திருக்குறள் சொற்பொருள் கரபி

அப்பல் = அப் பகுதிகளை

யுடைய, (950). அப்பால் நாற்கூற்று - பரிமேல ழகர், அந்த நான்கு பகுதி களையுடைய, நான்கு திறத்தது. அதாவது உற்றான் முதலிய நான்கு பகுதிகளையும் தனித் தனி நான்கு பகுதிகள் என்கிறார். மணக்குடவர் உரையில் 'நோயுற்றான். முதலிய நான்கு கூற்றது மருந்து என்கிறார். மருந்து பகுதி, (oso). அப்பொருளை அவ்விரகசியத்தை, அந்த மறைபொருளினை, (695). அமரகத்து = போர்க் களத்தே, (1027). அமரர் = தேவர், (121). நாவலர் நெடுஞ்செழியன் 'விரும்பு கின்றவர்' என்கிறார். இந்தச் சொல்லை வட சொல் என்பர் சிலர். தமிழ்ச் சொல்

என்று இதைக் கூறுபவரும் உண்டு. அவர்கள் இந்தச் சொல்லிற்கு இனிது

அமர்ந்திருப்பவர் என்பர். இந்தச் சொல் வானத்தில் இருப்பவர் என்னும் பொருளில் 'அ' என்ற எழுத்து அமரர் என நின்று; பின் அமரர் என்றாயிற்று எனலாம். அ.இ. உ. என்னும் சுட்டுகளிலிருந்து தமிழிலுள்ள சொற்களில் பெரும்பாலன தோன்றியுள்ளன என்பது தமிழ் மொழி ஆய்வாளர் கூற்று. அமராமை = முன்பு பொருந்தாமை;

முன்பு சுற்றமாக, (529). அமர் = போர், (814); அமர் செய் கின்ற, (1083); போரைச் செய்யும், (1125). அமர்க்கண் = போர் செய்கின்ற கண்கள்; அமர்த்தல்; போர் செய்தல், (1083).