பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

அளியர் இரங்கத் தக்கவர், அன்பு

காட்டத் தக்கவர், (1138). அளைஇ = கலந்து, அளாவி (91). அள்ளிக் கொள்வற்றே = அள்ளிக் கொள்ளும் பொருள் போலக் குவிந்தது. என்னை முழுவதும் அப்படியே வாரிக் கொள்வது போலப் படரத் தொடங்கிற்று, (1187). அற நீங்க, ஒழிய, (184, 258, 391): முழுமையாக, (465); நீங்க அல்லாமல், (717, 845). அற ஆழி = அறக் கடவுளாகிய, அறக்கடலாக விளங்கும், அறம் பூண்டவர், (8). அறஞ்சார நல்குரவு = அறத் தோடு பொருந்தாத வறுமையுடை யவன் என்பர் பரிமேலழகர்; அறத்தோடு பொருந்தி வராத வறுமை அடைய நேர்ந்தால்: நாவலர் நெடுஞ்செழியன்; பொருளையும் சிந்தித்து நல்கூர்தல் என்பர் மனக்குடவர், (1047). அறத்தாறு அறத்தின் பயன், (37). அறத்தாற்றின் = அறவழியில், (46). அறத்திற்கும் - ஆதிற் கூறப் பட்டுள்ள அறத்திற்கும், அற நூலிலுள்ள நெறிகட்கும், (543). அறத்திற்கே அன்பு சார்பு அறத்

திற்கே அன்பு துணையாக இருக்கும், (76). அறத்தின் = நல்வினையிலும்,

அறத்தினைவிட, (31,32). அறம் = தருமம், (8): துறவறம், (23); நன்மை, (31,32); தருமம், (35 முதல் 39, 46, 93, 96, 185, 249, 288, 296,297, 501, 1018, 10:19, 1047); தவம் 76; அற நெறி, (77); அறவோர் ஒழுக்கம்,

திருக்குறள் சொற்பொருள் சுரபி

(130); அற நூல்களையும், (141, 189); அறம் என்னும், (181); அறமென்பது அறநூலை; இது

ஆகுபெயர், (183); அறக்

கடவுள், (204). அறம் நானத் தக்கது அறம்

அவனிடம் தங்கியிருக்க

வெட்கப்படும் அல்லது நானும், (1018). அறம் நோக்கி =

எண்ணி, (189). அறல் = சமித்தல், செரித்தல், (1326). அறவினை = அறச் செயல், (33, 321); அறச்செயல்களைச் செய்தல், (909). அறவோர் = துறவோர், தண்ணளி யாகிய அறத்தையுடையோர், (30). அறன் = அறம், நல்வினை, நற் செயல், அறநெறிகள், (34, 40, 45, 48, 49, 142, 147, 148, 150, 157, 163, 173, 179, 182, 189, 366, 384, 441, 635, 644, 754). அறன் அழிஇ அறத்தை அழித்து இழிவாகப் பேசி, அறம் என்ற ஒன்று இல்லை என்று அழித்துச் சொல்லி, (182). அறன் ஆக்கம் = அறத்தையும்

செல்வத்தையும், (163). அறன் எனப்பட்டது - இல்லறம், துறவறம் என்ற இரண்டறங் களுள் அறமென்று சிறப்பித்துச் சொல்லப்பட்டது, (49). அறன்கடை = பாவம், தீய நெறி,

(142), அறன் சொல்லும் நெஞ்சம் = மற்றவர்கள் செய்யும் நன்மை களை நெஞ்சாரக் கூறும் மனம், (185), அறன் = நீங்காத, (552, 1295).

அறம் என்று