பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ - தமிழ்மொழியின் நெடுங்கணக்கில் மூன்றாம் எழுத்து. உயிர் முயற்சியால் பிறக்கும் எழுத்துக்களுள், அண் பல்லடியை நாக்கினது விளிம்பு பொருந்த ஒலிக்கும் ஒரு குற்றுயிர் அன்பு, வியப்பு, இகழ்வு ஒரெழுத்து, ஒரு சுட்டு, முப்பாலொருமை முன்னிலை வினை விகுதி. எடுத்துக்காட்டு உண்டி, முப்பாலொருமை முன்னிலை ஏவல் விகுதி. எடுத்துக்காட்டு கேட்டி - உயர். திணைப் பெண் பாலொருமை படர்க்கை பெயர் விகுதி. (எ.கா) குறத்தி, உயர் தினை ஆண்டால் படர்க்கை ஒருமைப் பெயர் விகுதி (எ.கா) வில்லி, அஃறிணை படர்க்கை ஒருமை பெயர் விகுதி (எ.கா.) ஊருணி, வினையெச்ச விகுதி (எ.கா) எண்ணி, இஃது - இது, இத - இகவென்ன ஏவல் முன்னிலை, அசைச் சொல்.

= சுட்டுப் பொருளில் வந்த இடைச்சொல். எடுத்துக் காட்டாக, குறள் 247. இவ் வுலகம். வாழும் இந்த உலகம். இங்கே இந்த உலகம் என்பதில் வரும் இந்த என்ற சொல் சுட்டுப் பொருளில் வந்துள்ளது, (336, 382, 383, 387, 392, 513, 571, 578, 662, 684, 688, 738, 743, 952, 992, 1085, 1129, 1130, 1142, 1147, 1150, 1162, 1169, 1176, 1220, 1227, 1274, 1319).

இஃதோ = இது, இந்த நோய்,

இஃது என்பது இஃதோ என ஈறு திரிந்து நின்றது. எடுத்துக் காட்டாக : 1.161-வது குறளில் 'யான் இஃதோ என்று வரும் சொற்றொடர்க்கு, இந்தக் காதல் நோயோ' என்று பொருள். இங்கே இஃது என்பது ஈறு திரிந்து இஃதோ என்று ஆனாது. (இக் குறளில் வரும் மன் - அசை).

இஃதோ நோய் = இந் நோய்,

(1161).

இகந்த = மிக்க (567).

இகந்து = நீங்குதலால், (113):

பிரிந்து, (1130).

இகலான் = மாறுபாட்டினால், (860). இகலிற்கு = ம்ாறுபாட்டிற்கு (858).

இகலின் = எதிர்த்து மாறுபாடு

கொள்வதால், (856).

இகல் = (இது திருக்குறளில் வரும் 86-வது அதிகாரம். இருவர் களுக்குள்ளே உண்டாகும் பகைமைப் பண்பு. மன மாறு பாடுகளை விளக்கும் தத்து வத் தன்மைகளைக் கூறுவது.) பகைஞர்களது மாறுபாடு, (484); சொற்போரில் மாறு பட்டு, (647); மன்னரிடம் ஏற்கனவே இருந்த அன்பு மாறுபடுவது, (691); மனமாறு பாடு, (851 முதல் 854, 857); மாறுபாடு மனத்தில் ஏற்படும்போது, (855).

இகலின் = எதிர்த்து மாறுபாடு

கொள்வதால், (856),

இகலிற்கு மனத்தில் மாறுபாடு

தோன்றும்போது, (858).

இகல்கானான் = மாறுபாட் டினை

எண்ணாதவன், (859).