பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி

இயல்பு = தகுதி பொருந்திய, (41); அற இயல்பு, (151); தன்மை, (344); மரபு இயல்பான பண்பு, (382, 903); தான் சேர்ந்த இனத்தின் தன்மை, (452); இயற்கை, (628); மரபு (903), இயல்புளி = நீதிக்கு மாறுபடாமல்,

முறைமையிலேயே, (545). இயல்வது : இனிது

(734). இயற்கு = தன்மையுடைய அவளது,

(1098). இயற்கை = தன்மை, (370); ஊழினால் வரும் இயற்கை, (374); இயல்பு, நடை, (637), இயற்பால = பெறக்கூடிய உயர்ந்த

இன்பங்கள், (342). இந்தலும் = பொருளை

உண்டாக்கலும், (385).

நடப்பது,

അത്ര = உண்டாக்கி யவர்க்கு, (760).

尝 படைத்தவன்,

கடவுள், (1062}.

இயன்றது = வினையாலனையும் பெயர்: இடைவிடாது நடந் தது: நடைபெறுவது, (35).

இயன்றன = செய்யப்பட்டிருக்க

வேண்டும், (1106).

இயைந்த = பொருந்துவதற்கு வந்த, உண்டாகிய, (73); பொருந்தி நிற்கின்ற, (1323).

இயைந்தக் கால் = வந்து வாய்க்குமே

யானால், (489).

இயைந்து = கண்ணோடு கண் கலந்த பின்பு கண்களைப் பொருந்த வைத்து, (576).

இயைபு 芝 பொருந்தி, (573).

இயையாக் கடை = முடியாத

விடத்து, (230).

55

இயையின் = கிடைத்து விடுமே யானால், அமைந்து விடுமே

யானால், (522). இரக்க = இரந்து பெறுக, (1051). இரக்கப்படுதல் = இரப்பார்க்கு ஈவனென்றிருத்தல்; படுதல் எச்ச உம்மை. இரக்கப்படுதலும் என் கின்ற இறந்தது தழுவிய எச்ச உம்மையும் காணுமளவுமென்ற முற்றும்மையும் குறைந்து நின்றன, (224). இரங்கல் = இது திருக்குறளில் வரும் 117-ஆவது அதிகாரம். படர் மெலிந்து இரங்கல் என்பது அதிகாரம் தலைப்பு. தலைவி பிரிவு ஆற்றாதவள். தலைவனை நினைந்து நினைந்துத் தான் பெறுகின்ற துன்பத்தினை எப் போதும் நினைத்துக் கொண்டே இருத்தலால், தலைவி உடல் இளைத்து வருந்திக் கூறும் நிலையே இந்த இரங்கல். இரங்கல் = திருக்குறளின் 123-வது அதிகாரம். பொழுது கண்டு இரங்கல். இரண்டு அதிகாரங் களும் இன்பத்துப் பால் என்ற மூன்றாவது பிரிவிலே வந்துள்ளன. 'பொழுது கண்டு இரங்கல்' என்பது மாலைப் பொழுது வரும்போது, தலைவி இரங்கி வருந்துதல் பற்றிக் கூறும் பகுதி தான் இந்த இரண்டாவது இரங்கல் பகுதி. இரங்கி விடும் = துக்கப்படுவான்;

வருந்துவான், (535). இரங்குவ = வருத்தப்படும், (635). இரண்டால் = பகைவர் இரண்டு பிரிவினராக இருந்தால் ஆல், அசை, (875).