பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளுக்கென ஒரகராதி (Thirukkural Concordance)

பதிப்புரை

தமிழுக்கு இலக்கணம் கூற வந்த தொல்காப்பியர் நூலில், அகராதிகளுக்குரிய பண்புகள் சொல்லப்படவில்லை. ஆனால், அகராதிக் கூறுகள் அதில் அமைந்துள்ளதை நம்மால் காண முடிகின்றது. அதெப்படி என்று கேட்கின்றீர்களா?

'அகர முதல் னகர இறுவாய்' என்று வரும் காப்பிய இலக்கணத் தொடர், தமிழ் மொழியின் அகர வரிசையின் ஆரம்பமும் - முடிவும் என நிரல் வரிசையால் உணரலாம்.

மொழி முதல், மொழி ஈறு, இடைநிலை எழுத்துக்கள் கூறும் பண்புகளைக் கொண்டு எழுத்து நிரலில் மேலும் சில கருத்துக்களை அறியலாம். ஆனால், சொற்பொருள் பற்றி, அதன் அகர முதலியைப் பின்பற்றி அனைத்துச் சொற்களுக்கும் பொருள் சொல்லப்படவில்லை.

திருவள்ளுவர் பெருமான்கூட, 'அகர முதல எழுத்தெல்லாம் என்று தனது முதற் குறட்பாவைத் துவக்கி, 1330-வது குறளை முடிக்கும்போது 'ஊடுதல் காமத்திற்கு இன்பம், அதற்கு இன்பம் கூடி முயங்கப் பெறின் என்றே முடிப்பதால், அவரது திருக்குறளிலும்கூட, அகர வரிசையின் துவக்கமும், முடிவும் அமையும் நிரல் வரிசையையும் காண முடிகின்றது.

திருக்குறளுக்கு உரை கூற வந்த பழம்பெரு ஆசிரியர்கள் தான்; 'பா' வரிசையைப் பின்பற்றி எல்லாச் சொற்களுக்கும் பொருள் கூறியுள்ளார்கள். காரணம், அவர்கள் உரைமேதைகள்! அதனால் தங்களது கடமையைச் சிறப்பாகச் செய்துள்ளார்கள் எனலாம்!

தொல்காப்பியத்திற்குப் பிறகு ஆதி திவாகரம், சேந்தன் திவாகரம், 'பிங்கல நிகண்டு', சூடாமணி நிகண்டு', 'அகராதி என்ற பெயராலேயே 'அகராதி நிகண்டு', 'உரிச்சொல் நிகண்டு', 'கைலாச நிகண்டு, பொருள் தொகை நிகண்டு', 'பொதிகை நிகண்டு', 'நாம தீபநிகண்டு போன்ற நிகண்டுகள் சில வெளிவந்து சொற்களுக்குப் பொருள்கூறிட தொல்காப்பியம் நூல்தான் வழிகாட்டி இருக்கிறது எனலாம்.

இதற்கும் மேலாக, தமிழ்நாட்டிற்கு கிறித்துவ மதப் பிரச்சாரம் செய்ய ஐரோப்பியர் வந்தார்கள். அவர்களிலே முதன்முதலாக 1712-ஆம் ஆண்டில் வந்த பார்த்லோமிய சீகன் பால்க் என்பவர்தான் தமிழ் அகராதி என்ற பெயரிலே அகராதியை எழுதினார்.