பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 5

வீரமா முனிவர் என்ற பெஸ்கி பாதிரியார், அடுத்தபடியாக 1732-ஆம் ஆண்டில் சதுர அகராதியை பெயர், பொருள், தொகை, தொடை என்ற நான்கு வகைப் பெயரில் அகர வரிசையைப் பின்பற்றி முதன் முதலாக அற்புதமான ஒரு சதுர அகராதியை அச்சிட்டு தமிழர்க்கு வழங்கிய பெருமை அவருக்கே உண்டு.

தமிழ் - இலத்தீன், இலத்தீன் - தமிழ், தமிழ் - பிரெஞ்சு, தமிழ் - ஆங்கிலம் - போர்ச்சுக்கீசிய மொழி, இலத்தீன் - தமிழ் போன்ற அகராதிகளைப் பல மொழிகளில் எழுதி வெளியிட்டவர் யார் தெரியுமா? அதே வீரமா முனிவர்தான்!

இதற்குப் பிறகு 1779-ஆம் ஆண்டில், ஃபெப்ரிசியஸ் என்பவர், தமிழ் - ஆங்கில அகராதியும், வின்சுலோ பாதிரியாரின் ஆங்கில - தமிழ் அகராதி 1842-லும், 1862-ல் அவராலேயே தமிழ் - ஆங்கில - அகராதியும் எழுதப்பட்டு வெளிவந்தன. இவையெல்லாம், ஐரோப்பியர் தமிழ் மொழியைக் கற்பதற்குப் பேருதவியாக அமைந்தன.

சதாவதானி, பண்டித நா. கதிரைவேற்பிள்ளையின் தமிழ் சொல்லகராதி 1904-ஆம் ஆண்டிலும், கலைக் களஞ்சியம் போல 'அபிதான சிந்தாமணி என்ற பொருள் விளக்கம் கூறும் அகராதி ஒன்றும்; 1910-ஆம் ஆண்டில் வெளி வந்தது.

பேராசிரியர் டி.எஸ். வையாபுரி பிள்ளை தலைமையில், சென்னைப் பல்கலைக் கழகம் தமிழ்ப் பேரகராதியை (Lexicon) 1936-ஆம் ஆண்டில் வெளியிட்டது. இதே காலக் கட்டத்தில் மதுரைத் தமிழ்ப் பேரகராதி வந்தது. இதன் பின்பு 1938-ஆம் ஆண்டில் - சொற் பிறப்பு ஒப்பியல் தமிழ் அகராதி ஒன்றும் வெளியிடப்பட்டது.

இவைகட்குப் பிறகு, இலக்கிய அகராதிகள் என்ற பெயரில், சிலப்பதிகாரம், கம்பராமாயணம், பெரிய புராணம், பெருங்கதை, வில்லிபாரதம் போன்ற தமிழ் காப்பியங்களுக்குச் சொல்லடைவுகள் வெளி வந்தன. தேவாரம், வைணம் போன்ற சமைய நூல்களுக்கான அகராதி நூல்களும் வெளியிடப்பட்டன.

இவ்வாறு, மேலும் எண்ணற்ற பல்துறை அகராதிகள், தமிழ் மொழி வளர்ச்சிக்காக வெளிவந்த வண்ணம் இருந்தன. ஆனால், திருக்குறள் வளர்ச்சிக்காக, மாணவர்களும் மற்றப் பிரிவு மக்களும் எளிமையாகத் திருக் குறளைக் கற்றிடத் திருக்குறளுக்கென்று அகராதிகள் ஏதாவது வெளி வந்துள்ளனவா என்று தேடிப் பார்க்க வேண்டிய சூழ்நிலைதான் இன்று வரையும் உள்ளது.

தமிழ்த் தாத்தா என்று அழைக்கப்படுகின்ற டாக்டர் உ.வே. சாமி நாதையர் நூலகம் சென்னை மாநகரிலுள்ளது. அந்த நூலகத்துள் இன்று வரை வெளி வராத நூற்கள் எல்லாம் இருக்கின்றன. அகநானூறு அகராதி, தலக்குறிப்புகள், திருக்குறள் பரிமேலழகர் அரும்பத அகராதி, தேவார அருந்தொடரகாரதி, புலவர் வரலாறு, வாகட அகராதி போன்ற நூற்