பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

翰 திருக்குறள் சொற்பொருள் சுரபி

களெல்லாம் அச்சு ஏறாமலேயே அந்த நூலகத்தில் அழுக்குக் குப்பைகளாகக் கிடக்கின்றன. என்றைக்கு நற்காலம் நேருமோ அவற்றைத் தூசு தட்டிட:

உலக மொழிகளில் ஒப்பியல் சொற்றொகை அகராதியை 1787-89ல் பாலியஸ் (Patias) என்பவர் எழுதினார். ஆசிய மொழிகளில் ஒப்பியல் அகராதியை 1868-ல் ஹ9ண்டர் எழுதினார்.

திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணத்தை கால்டுவெல் எனும் வித்தகரால் சொற்பிறப்பு ஒப்பியற் கூறுகளோடு எழுதப்பட்டது. வடமொழிச் சொற்களின் வேர்களைத் தமிழில் காட்டிட நீர்வேலி சங்கர பண்டிதர், 1908-ஆம் ஆண்டில் தாது மாலை எனும் பெயருடைய ஒரு நூலை ஆராய்ந்து எழுதினார்.

சென்னைப் பல்கலைக் கழகத்தவர்களால் பேரகராதி எழுதி வெளியிடும் ஆற்றலும் சிந்தனையுமிருந்தது. ஆனால், உலக மக்களது வாழ்வியல் சட்டமான திருக்குறள் எனும் பொது மறைக்கு ஒரு திருக்குறள் அகராதி எழுதாமல் விடப்பட்டது.

உலக மொழிச் சொற்களின் வேர், தமிழ் மொழியில் இருக்கிறது என்று ஆராய்ந்து எழுதிட ஈழத்துப் பேரறிஞர் ஞானப் பிரகாசருக்கும், மொழி ஞாயிறு தேவநேயப் பாவணருக்கும் நேரமிருந்தது; திருக்குறளுக்கு ஓர் அகராதியை எழுதிட அவர்களுக்கு நேரமில்லையே என்று ஒரு தமிழ் மகன் வருந்துவதில் என்ன தவறு?

தமிழ் மொழியிலே இருந்து இங்கிலீஷ் மொழிக்கு இரவல் சென்ற தமிழ்ச் சொற்களை ஆராய்ந்த ஞானகிரி எனும் மொழி வித்தகரால், 1972-ல் எழுத முடிந்தபோது, திருக்குறளுக்கென ஓர் சொற்பொருள் அகராதியைத் திரட்டிட முடியாததேன்?

திருக்குறளுக்கு மரபுரை எழுத முடிந்த பாவாணரால், மறைமலையடி களாரையும் தமிழகப் புலவர் குழு அறிவையும் மீறி, திருக்குறள் கி.மு. 3-ஆம் நூற்றாண்டின் நூலென ஆராய்ந்துக் கூற முடிந்த பாவாணரால், திருக்குறளுக்கு ஒரு சொற்பொருள் பட்டியல் எழுதாமல் போயிற்றே!, இது தமிழறமாகுமா?

பெளத்த மதச் சொற்களை தனியாகத் தொகுத்து, 1900-ஆம் ஆண்டில் வெளியிட்ட டாக்டர் உ.வே. சாமிநாதையர் எனும் தமிழ்த் தாத்தாவால், ஏன் திருக்குறளுக்கென ஓர் அகராதியைத்தொகுக்கலாம் என்ற அக்கரை உண்டாகவில்லை?

அட இவ்வளவு ஏன்? தமிழ் அறிஞரான யாகப்பப் பிள்ளை என்பவர் 19-ஆம் நூற்றாண்டில் 'கடினச் சொல் அகராதி" என்ற ஓர் அகராதியை வெளியிட்டார். அவரால் முடியாதா திருக்குறளுக்கு சொற்பொருள் அகராதி - ஒன்று எழுதிட?

  • சுன்னாகம் குமாரசாமிப் பிள்ளை, இருபதாம் நூற்றாண்டில் இலக்கியச் Qత్తాకు அகாதி எழுதுவதற்குச் சொற்களை தேடித் திரட்ட முடிந்ததல்லவா? ஏன் இயலவில்லை திருக்குறளுக்கு அகராதி தொகுக்க - நேரமில்லையா?