27. அறிவுடைமை நல்ல அறிவு உடையவராய் இருத்தல். அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார் என்னுடைய ரேனும் இலர். (ப-உ) அறிவு உடையார்-(தம்மிடம் வேறொன்றும் இல்லா விட்டாலும்) நல்ல அறிவு மட்டும் உடையவர்கள், எல்லாம் உடையார்-வேறு எல்லாப் பொருள்களையும் உடையவராகக் கருதப் படுவார்கள். அறிவு இலார்-நல்ல அறிவு இல்லாதவர்கள், என் உடையரேனும்-வேறு எல்லாப் பொருள்களையும் உடையவராக இருந்தாலும், இலர்-ஒன்றும் இல்லாதவராகவே கருதப்படு வார்கள். (க-உ) நல்லறிவால் எல்லாச் செல்வங்களையும் சம்பாதித்துக் கொள்ளலாம். அறிவுடையார்-எழுவாய் ; உடையார்-பயனிலை. அறிவிலார்-எழுவாய் ; இலர்-பயனிலை. 28. குற்றங் கடிதல் குற்றங்களைப் போக்குதல். வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்துறு போலக் கெடும். (ப-உ) வருமுன்னர்-குற்றம் வருவதற்கு முன்பேயே, காவாதான்-வாராதபடிக் காத்துக் கொள்ளாதவ னுடைய, வாழ்க்கை-வாழ்க்கையானது, (அக்குற்றம் வந்தபோது) எரி முன்னர்-நெருப்பின் முன்னே உள்ள,வைதூறுபோல-வைக் கோல் போரைப் போல, கெடும்-கெட்டுவிடும். (க.உ) வருவதற்கு முன்பேயே குற்றத்தைத் தடுத்துக் கொள்ள வேண்டும். வாழ்க்கை-எழுவாய் , கெடும்-பயனிலை. 20
பக்கம்:திருக்குறள் தெளிவுரை–முதற்படிவம்.pdf/20
Appearance