25. கல்லாமை படிக்கத்தக்க புத்தகங்களைப் படிக்காத தாழ்மை. மேல்பிறந்தார் ஆயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும் கற்றார் அனைத்(து)இலர் பாடு. (ப-உ) கல்லாதார்-படிக்காதவர், மேல்-உயர்ந்த சாதியில், பிறந்தார் ஆயினும்-பிறந்தார் ஆனாலுங்கூட, கீழ்ப்பிறந்தும்-தாழ்ந்த சாதியில் பிறந்தும், கற்றார்-படித்தவருக்குள்ள, அனைத்து-அந்த அளவு, பாடு-பெருமை, இலர்-இல்லாதவராவர். (க.உ) கற்றவரே உயர் குலத்தவர் ; கல்லாதவரே இழி குலத்தவர். . கல்லாதவர்-எழுவாய் பாடு ; இலர்-பயனிலை. 26. கேள்வி கேட்கத்தக்க கருத்துக்களைக் கேட்டல். செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை. (ப-உ) செல்வத்துள்-மனிதர்க்கு இருக்க வேண்டிய செல்வங்களுள், செவிச் செல்வம்-காதால் கேட்கும் கேள்விச்செல்வமும், செல்வம்-ஒரு செல்வமாகும். அச்செல்வம்-(மேலும்) அக்கேள்விச் செல்வமானது, செல்வத்துள் எல்லாம்-மற்றைய செல்வங்கள் எல்லாவற்றைக் காட்டிலும், தலை-முதன்மையான தாகும். (க.உ) கேள்விச் செல்வமே தலை சிறந்த செல்வம். அச் செல்வம்-எழுவாய் தலை-பயனிலை. 19
பக்கம்:திருக்குறள் தெளிவுரை–முதற்படிவம்.pdf/19
Appearance