43. நாடு நல்ல நாட்டின் தன்மை. பிணியின்மை செல்வம் வினைவின்பம் ஏமம் அணிஎன்ப நாட்டிற்குஇவ் வைந்து. (ப-உ) பிணியின்மை - தட்பவெப்பத்தால் நோய் உண்டாக்கா திருத்தல், செல்வம்-செல்வம் கொடுத்தல், விளைவு-நன்றாக விளைதல், இன்பம்-களிப்பு உண்டாக்குதல், எமம்-காவல் உடையதாய் இருத்தல், இவ் ஐந்து-ஆகிய இந்த ஐந்து தன்மைகளும், நாட்டிற்கு-ஒரு தேசத்திற்கு, அணி என்ப-அழகு என்று அறிவுடையோர் சொல்லுவர். (க-உ) நோய்தராமை, செல்வம், விளைவு, இன்பம், காவல் என்னும் ஐந்தும் இருத்தல் ஒரு நாட்டிற்கு அழகு. அறிவுடையோர்-தோன்றா எழுவாய் , என்ப-பயனிலை. 44. நட்பு நல்ல சினேகிதரின் தன்மை உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு. (ப-உ) நட்பு-நல்ல சினேகமாவது, உடுக்கை இழந்தவன். (ஒரு சபையின் நடுவே இருக்கும் போது) கட்டிய துணியை நழுவ விட்டவனுடைய, கைபோல-கை விரைந்து சென்று நழுவிய துணியைக் கட்டி மானத்தைக் காப்பாற்றுவது போல, ஆங்கேநமக்குத் துன்பம் வந்த அப்பொழுதே, இடுக்கண்-அத்துன்பத் தை, களைவது ஆம்-விரைந்து நீக்கிக் காப்பாற்றக் கூடியதாகும் (க-உ) ஆபத்தில் உதவுவதே நட்பாகும். நட்பு-எழுவாய் களைவதாம்-பயனிலை. 28
பக்கம்:திருக்குறள் தெளிவுரை–முதற்படிவம்.pdf/28
Appearance