பக்கம்:திருக்குறள் தெளிவுரை-மூன்றாம் படிவம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70. உழவு பயிர்த் தொழிலின் சிறப்பு. இலமென்(று) அசைஇ யிருப்பாரைக் காணின் நிலம்என்னும் நல்லாள் நகும். (ப-உ) இலம்-(யாங்கள்) ஒன்றும் இல்லாத எழைகள், என்று-என்று சொல்லி, அசைஇ-சோம்பல் கொண்டு, இருப் பாரை-இருக்கும் சோம்பேறிகளை, நிலம் என்னும்-பூமி என் கின்ற, நல்லாள்-பெண், காணின்-கண்டால், நகும்-(அவர் களின் சோம்பலைக் குறித்துச்) சிரிப்பாள். (க.உ) உழவுத் தொழில் இருக்கவும் அதைச் செய்யாத சோம்பேறிகளைக் கண்டால் நிலமாது சிரிப்பாள். நல்லாள்-எழுவாய் , நகும்-பயனிலை. அசைஇ-சொல் லிசை அளபெடை. எல்லா உரிமையும் பைந்தமிழ்ப் பதிப்பகத்திற்கே. 1–7–49 ரீ. அரவிந்தாஸ்ரம அச்சகம், புதுச்சேரி. W. D. 544/49/1000 32