பக்கம்:திருக்குறள் தெளிவுரை-மூன்றாம் படிவம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(ப-உ) பெருமை உடையார்-பெருந்தன்மை உடையவர்கள், அருமை உட்ைய-பிறரால் செய்வதற்கு முடியாத, செயல்காரியங்களை, ஆற்றின்-முறையாக, ஆற்றுவார்-செய்து முடிப் பார்கள். (க.உ) பிறரால் செய்ய முடியாத காரியங்களையும் பெருமை உடையவர்கள் செய்வார்கள். - பெருமை உடையவர்-எழுவாய் ஆற்றுவார்-பயனிலை. 68. சான்றண்மை நிறைந்த பல உயர்ந்த குணங்களைக் கையாளுதல். ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றண்மைக்கு) ஆழி எனப்படு வார். (ப-உ) 'சான்ருண்மைக்கு-நிறைந்த பெருந்தன்மைக்கு, ஆழி எனப்படுவார்-கடல் என்று சொல்லக்கூடிய பெரியோர்கள், ஊழி-(உலக முடிவாகிய) ஊழிக்காலமே, பெயரினும்பெயர்ந்து அழிப்பதானுலும், தாம்-தாங்கள், பெயரார்(தங்கள் பெருந்தன்மையிலிருந்து) மாறமாட்டார்கள். (க.உ) சான்ருேர்கள், எத்துன்பம் வரினும் கொள்கையி லிருந்து மாறமாட்டார்கள். - எனப்படுவார்-எழுவாய் ; பெயரார்-பயனிலை. 69. குடிசெயல்வகை பிறந்த குடும்பத்தை மேலாகச் செய்யும் விதம். குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம் மடிதற்றுத் தான்முந் துறும். (ப-உ) குடி-(நான் பிறந்த) குடியை, செய்வல்-உயர்ச்சி உடையதாகச் செய்வேன், என்னும்-என்று பாடுபடுகின்ற, ஒரு வற்கு-ஒருவனுக்கு, தெய்வம்-தெய்வமானது, மடி-(தன் இடுப்பு) உடையை, தற்று-இறுக்கித் கட்டிக்கொண்டு, தான் முந்துறும்-தான் முன்வந்து உதவி செய்யும். (க.உ) குடிப்பெருமையை வளர்ப்பவனுக்கு, கூடத் தெய்வ மும் உதவி செய்யும். தெய்வம்-எழுவாய் ; முந்துறும்-பயனிலை. 31