பக்கம்:திருக்குறள் தெளிவுரை-மூன்றாம் படிவம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65. குடிமை உயர்ந்த குடும்பத்தில் பிறந்தவர் தன்மை. ஒழுக்கமும் வாய்மையும் நானும்இம் மூன்றும் இழுக்கார் குடிப்பிறந் தார். (ப-உ)குடிப்பிறந்தார்-உயர்ந்த குடும்பத்தில்பிறந்தவர்கள், ஒழுக்கமும்-நல்லொழுக்கமும், வாய்கிமயும்-மெய்ம்மையும், நாணும்-மானமும் (ஆகிய) இம்மூன்றும்-இந்த மூன்று பண்புகளி லிருந்தும், இழுக்கார்-தவறமாட்டார்கள். (க.உ) நல்ல குடியிற் பிறந்தவருக்கு ஒழுக்கம், மெய், மானம் என்னும் மூன்றும் இருக்கும். குடிப்பிறந்தார்-எழுவாய் இழுக்கார்-பயனிலை. 66. மானம் தாழ்வைப் பொறுக்காத மானம் உடைமை. குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ குன்றி அனய செயின். (ப-உ) குன்றின் அனையாரும்-மலையை 955 பெருமை உடையவர்களும், குன்றுவ-(தம் குடிப் பெருமை) குறைதற் கேற்ற காரியங்களே, குன்றி அணைய-குன்றிமணியை ஒத்த சிறி தளவு, செயின்-செய்தாலும், குன்றுவர்-பெருமை குறைந் தவர் ஆவார்கள். * (க-உ) மானம் இழக்கக்கூடிய காரியத்தைச் சிறிதளவும் செய்யலாகாது. அனையாரும்-எழுவாய் ; குன்றுவர்-பயனிலை. 67. பெருமை பெரியாரது பெரிய சிறப்புத்தன்மை. பெருமை உடையவர் ஆற்றுவார் ஆற்றின் அருமை உடைய செயல். 30