பக்கம்:திருக்குறள் தெளிவுரை-மூன்றாம் படிவம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(தம் நண்பர்) செய்தாலும், அன்பு அருர்-(அந்நண்பரிடத் துள்ள) அன்பு அற்றுப்போக மாட்டார்கள். (க.உ) பலநாள் பழகிய நண்பருக்குத் தவறி ஒரு துன்பம் செய்தாலும், அவர்கள் அன்பு நீங்கமாட்டார்கள். கேண்மையவர்-எழுவாய் , அன்பருர்-பயனிலை. இ3. தி நட்பு . கெட்ட சினேகிதரின் தன்மை. அமரகத்(து) ஆற்றறுக்கும் கல்லாமா அன்னர் தமரின் தனிமை தலை. (ப-உ) அமர் அகத்து-போர்க்களத்திலே, ஆற்று அறுக் கும்-(த்ன்மேல் எறியிருந்தவனைக் கீழே தள்ளி) வலிமையைக் குறைக்கின்ற, கல்லா-போர்ப்பயிற்சியை அறியாத, மா-குதி ரையை, அன்னர்-ஒத்தவர்கள் (அஃதாவது, ஆபத்தில் கைவிடு பவர்கள்) தமரின்-நண்பராக இருப்பதைக் காட்டிலும்,தனிமை -தனித்திருப்பதே, தலை-(ஒருவருக்குச்) சிறந்ததாகும். (க.உ) தீய நண்பரோடு பழகுவதைக் காட்டிலும் தனித். திருப்பதே நல்லது. தனிமை-எழுவாய் தலை-பயனிலை. 64. கூடா நட்பு உள்ளன்பு கலவாத நட்பினரின் தன்மை. சொல்வணக்கம் ஒன்னர்கண் கொள்ளற்க வில்வணக்கம் திங்கு குறித்தமை யால். (ப-உ)வில்வணக்கம்-வில்லின் வளைவு, தீங்கு குறித்தமை யால்-(எதிரிமேல் அம்பெய்ய வேண்டும் என்ற) தீங்கைக் குறிக் கோளாகக் கொண்டு அமைக்கப்பட்டிருப்பதால், ஒன்னர்கண்பகைவரிடத்து நிகழ்கின்ற, சொல் வணக்கம்-(வளைந்து பேசும்) சொல் அடக்கத்தை, கொள்ளற்க-(உண்மையென்று நம்பி) நீ எற்றுக் கொள்ளாதே. - (க.உ) உள்நட்பு இல்லாதவர்கள் எமாற்றப் பேசும் சொல் லடக்கத்தை நம்பலாகாது. - நீ-தோன்ரு எழுவாய் ; கொள்ளற்க-பயனிலை. 29