பக்கம்:திருக்குறள் தெளிவுரை-மூன்றாம் படிவம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60. நட்பு நல்ல சினேகிதரின் தன்மை. முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்(து) அகநக நட்பது நட்பு. (ப-உ) முகம் நக-(நேரில் கண்டபோது) முகம் மட்டும் மலரும்படி, நட்பது-(ஒப்புக்குச் சினேகிப்பது, நட்பு அன்று. உண்மையான சினேகம் ஆகாது. நெஞ்சத்து-அன்போடு, அகம் நக-மனம் மலரும்படி, நட்பது-சினேகிப்பதே, நட்பு-நல்ல சினேகம் ஆகும். - (க-உ) ஒப்புக்குச் சினேகிக்காமல் உள்ளன்போடு சினேகிக்க வேண்டும். (அகநக) நட்பது-எழுவாய் ; நட்பு-பயனிலை. 61. நட்பு ஆராய்தல் சினேகத்திற்கு உரியவர் இன்னர் என்று ஆராய்தல். உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு. (ப.உ) உள்ளம்-மன உறுதி, சிறுகுவ-குறைவதற்குரிய செயல்களே, உள்ளற்க-நீ எண்ணுதே. (அதுபோலவே) அல்லல் கண்-துன்பம் வந்த காலத்தில், ஆற்று அறுப்பார்-கைவிட்டு உன் ஆற்றலைக் குறைக்கும் தீயோருடைய, நட்பு-சினேகத்தை, கொள்ளற்க-நீ கொள்ளாதே. - (க-உ) துன்பக் காலத்தில் கைவிடுபவரின் நட்பைக் கொள்ள லாகாது. - ; - நீ-தோன்ற எழுவாய் ; கொள்ளற்க-பயனிலை. 62. பழைமை பலநாள் பழகிய நட்பின் தன்மை. அழிவந்த செய்யினும் "அன்பறர் அன்பின் வழிவந்த கேண்மை யவர். (ப-உ) அன்பின் வழி வந்த-(பலநாள் பழகிய) அன்பின் வழியாக நிகழ்கின்ற, கேண்மையவர்-சினேகத்தை யுடையவர், அழிவந்த-தமக்கு அழிவு தரக்கூடிய செயல்களே, செய்யினும் 28