பக்கம்:திருக்குறள் தெளிவுரை-மூன்றாம் படிவம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(அவர்களே) எற்றுக் காத்து, இறைவற்கு-தன் அரசனுக்கு, இறை-வரிப்பணம், ஒருங்கு-முழுவதையும், நேர்வதுசெலுத்த வல்லதே, நாடு-(உயர்ந்த) நாடாகும். (க.உ) தன்னிடம் வந்த பிறரையும் காத்து, தன் அரசனுக் கும் வளந்தருவதே நல்ல நாடு. - நேர்வது-எழுவாய் ; நாடு-பெயர்ப் பயனிலை. 58. படை மாட்சி நல்ல படையின் இலக்கணம். கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும் ஆற்ற லதுவே படை (ப-உ) கூற்று-எமன், உடன்று-கோபித்து, மேல்வரினும் -தன்மேல் சண்டைக்கு வந்தாலும், கூடி-(அஞ்சாது) ஒன்று கூடி, எதிர்நிற்கும்-எதிர்த்து நிற்கக்கூடிய, ஆற்றலதுவே.வலிமையை உடையதே, படை-(சிறந்த) படையாகும். (க.உ) எமனையும் எதிர்க்கக் கூடியதே வலிய படையாகும். ஆற்றலதுவே-எழுவாய் ; படை-பெயர்ப் பயனிலை. 59. படைச் செருக்கு படைகளின் வீர மேம்பாடு. விழித்தகண் வேல்கொண்டு) எறிய அழித்திமைப்பின் ஒட்டன்றே வன்க ணவர்க்கு. - (ப-உ) வேல் கொண்டு-(பகைவர்கள்) வேலாயுதத்தைக் கைக்கொண்டு, எறிய-(தம்மேல்) வீச, (அப்போது வீரர்கள்) விழித்தகண்-திறந்து கொண்டிருக்கும் தம் கண்களே, அழித்து -(ஒருநிலையான பார்வையிலிருந்து) மாற்றி, இமைப்பின்மூடி மூடிச் சிமிட்டுவார்களே யானல், (அது) வன்கணவர்க்குவீரருக்கு, ஒட்டு அன்ருே-புறமுதுகிட்டு ஓடுதலாகப் பொருள் அல்லவா ? (ஆம்) (க.உ) எதிரி வேல் விடும்போது, வீரர்கள் தம் கண்களைக் கூடச் சிமிட்டலாகாது. இமைத்தல்-தோன்ரு எழுவாய் ; ஒட்டன்ருே-பயனிலை. 27