பக்கம்:திருக்குறள் தெளிவுரை-மூன்றாம் படிவம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55. குறிப்பு அறிதல் பிறர் கருத்தைக் குறிப்பாக அறிந்து கொள்ளுதல். ஐயப் படாஅ(து) அகத்த துணர்வானத் தெய்வத்தோடு) ஒப்பக் கொளல். (ப-உ) அகத்தது-(பிறருடைய) மனத்தில் உள்ள குறிப்பை, ஐயப்படாது-சந்தேகம் இன்றி (நிச்சயித்து) உணர்வான(குறிப்பால்) உணர வல்லவனே, தெய்வத்தோடு-கடவுளோடு, ஒப்ப-சமமாக, கொளல்-நீ கொள்வாயாக. (க.உ) பிறர் மனக்குறிப்பை உணரக் கூடியவர்கள், அங் ங்ணம் செய்யும் கடவுளுக்கு ஒப்பாவார்கள். நீ-தோன்ரு எழுவாய் ; கொளல்-பயனிலை. 56. அவையறிதல் சபையில் உள்ளவர்களின் நிலைமையை அறிந்து பேசுதல். அவையறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின் தொகையறிந்த தூய்மை யவர். (ப-உ) சொல்லின் தொகை-சொற்களைத் தொகுத்துப் பேசு வதை, அறிந்த-தெரிந்த, துய்மையவர்-தெளிவுடையவர்கள், அவை அறிந்து-(தாம் பேச இருக்கின்ற) சபையில் உள்ளவர் களின் தகுதியைத் தெரிந்துகொண்டு, ஆராய்ந்து-(பேசவேண் டியவைகளை) ஆராய்ச்சி செய்து, சொல்லுக-(பின்பு) பேசுவார் &G TFT5. (க.உ) பேசுபவர், சபையின் நிலைக்கு ஏற்பப் பேசவேண்டும். துய்மையவர்-எழுவாய் ; சொல்லுக-பயனிலை. 57. நாடு நல்ல நாட்டின் தன்மை. பொறைஒருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்(கு) இறைஒருங்கு நேர்வது நாடு. (ப-உ) பொறை-(பிறநாட்டு மக்களாகிய) சுமை, ஒருங்குஒருசேர, மேல்வருங்கால்-தன்னிடத்தில் வந்தால், தாங்கி 26