பக்கம்:திருக்குறள் தெளிவுரை-மூன்றாம் படிவம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தண்ணீர் ஊற்றினல் இரண்டும் கெடுவதைப் போல என்று உவமை காட்டியதால் இஃது உவமை யணி. எமார்த்தல்-எழுவாய் ; இரீஇயற்று-பயனிலை. இரீஇயற்று-உயிர் அளபெடை. 53. வினைத்திட்பம் காரியம் செய்வதில் திடமான உறுதி கொள்ளுதல். துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி இன்பம் பயக்கும் வின. (ப-உ) (நல்ல காரியத்தைத் தொடங்கும்போது) துன்பம்துன்பங்கள், உற-மிகுதியாக, வரினும்-வருவதாக இருந்தா லும் (சோராமல்) துணிவு ஆற்றி-துணிச்சலைச் செலுத்தி, இன்பம் பயக்கும்-இன்பத்தைக் கொடுக்கின்ற, வினை-நற் செயலையே, செய்க-நீ செய்வாயாக. (க.உ) துன்பத்திற்குக் கலங்காமல், இன்பந் தரும் காரி யத்தையே செய்ய வேண்டும். w நீ-தோன்ரு எழுவாய் ; செய்க-பயனிலை. 54. வினை செயல் வகை காரியம் செய்யும் விதம். வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால் தீயெச்சம் போலத் தெறும். (ப-உ) வினை-(செய்யத் தொடங்கிய) செயலும், பகை(அழிக்கத் தொடங்கிய) பகையும், என்ற-என்று சொல்லப்பட்ட, இரண்டின்-இரண்டினுடைய, எச்சம் -(முழுதும் செய்யாது விட்ட) குறைபாடுகள், நினையுங்கால்-ஆராய்ந்து பார்க்கின், தி எச்சம் போல-(முழுதும் அவிக்காமல் விட்ட) நெருப்பின் மிச் சத்தைப் போல், தெறும்-ஒரு காலத்தில் வளர்ந்து) அழித்து விடும். - டு (க.உ) காரியம் செய்வதிலும், பகைவரை அழிப்பதிலும் குறைபாடு நிறுத்தாமல், முற்றும் முடித்துவிட வேண்டும். (இரண்டின்) எச்சம்-எழுவாய் ; தெறும்-பயனிலை. இச் செய்யுளில் தீ எச்சத்தை உவமை கூறியதால் உவமையணி. என்ற இரண்டின்-அ தொகுத்தல் விகாரம். 25