பக்கம்:திருக்குறள் தெளிவுரை-மூன்றாம் படிவம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(ப-உ) தெரிதலும்-(செய்யத்தக்க காரியம் இன்னது என்று) தெரிதலும், தேர்ந்து செயலும்-(அதனைச் செய்யும் வழியை) ஆராய்ந்து செய்தலும், ஒருதலையாச் சொல்லலும்(அரசனுக்குச் சஞ்சலம் உண்டானபோது இதுதான் சரியென்று) ஒரே உறுதியாக வற்புறுத்தலும், வல்லது-வல்லவனே, அமைச்சு-(சிறந்த) மந்திரியாவான். (க.உ) தெரிதலும், தேர்ந்து செயலும், ஒருதலையாச் சொல்லலும் உடையவனே உண்மை மந்திரியாவான். வல்லது-எழுவாய் அமைச்சு-பயனிலை. 51. சொல்வன்மை பேச்சு வன்மை உடையவராய் இருத்தல். சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை வெல்லும்சொல் இன்மை யறிந்து. (ப-உ சொல்லை-தான் சொல்லக் கருதிய சொல்லை, பிறிது ஒர் சொல்-வேருெருவருடைய சொல்லாய், வெல்லும் சொல். வெல்லக்கூடிய சொல், இன்மை அறிந்து-இல்லாததைஅறிந்து, அச்சொல்லை-(சொல்லக் கருதிய) அந்தச் சொல்லை, சொல்லுகநீ சொல்லுவாயாக. - (க.உ) தன் பேச்சைப் பிறர் பேச்சு வெல்லாதபடிப் பேச வேண்டும். நீ-தோன்ரு எழுவாய் , சொல்லுக-பயனிலை. 52. வினைத்துய்மை பரிசுத்தமான காரியங்களைச் செய்தல். சலத்தால் பொருள்செய்(து) ஏமார்த்தல் பசுமட் கலத்துள்நீர் பெய்திரீஇ யற்று. (ப-உ) சலத்தால்-தீவினையால், பொருள் செய்து-பொரு 2ளச் சம்பாதித்து, எமார்த்தல்-பாதுகாவல் செய்வது, பசுமண் கலத்துள்-பச்சை மண்ணுல் செய்யப்பட்ட பாண்டத்தில், நீர் பெய்து-தண்ணீரை ஊற்றி, இரீஇயற்று-பாதுகாவல் செய் வது போலாம். (க-உ) கெட்ட வழியால் பொருள் சம்பாதித்தவர்கள், அப் பொருளுடன் தாமும் அழிவர். பச்சை மண் பாண்டத்தில் 24