பக்கம்:திருக்குறள் தெளிவுரை-மூன்றாம் படிவம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(க.உ) சோம்பல் இல்லாத அரசன் முயன்ருல், உலக முழு வதையும் அடையமுடியும். மன்னவன்-எழுவாய் ; எய்தும்-பயனிலை. தாஅயதுஉயிர் அளபெடை. .# 48. ஆள்வினை உடைமை இடைவிடாத உடல் முயற்சி உடைமை. தெய்வத்தான் ஆகா(து) எனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும். (ப-உ) தெய்வத்தான்-ஊழ்வினையால், ஆகாது எனினும்(எடுத்த காரியம்) முடியாமற்போலுைம்,முயற்சி-முயற்சியானது, தன்-தனக்கு இடமாகிய, மெய்-உடம்பினது, வருத்தக் கூலிவருத்தத்திற்கு ஏற்ற கூலியை, தரும்-கொடுக்கும். (வீணு காது) . - . (க.உ) உடம்பின் முயற்சிக்கு எற்ற கூலி கிடைத்தே திரும். முயற்சி-எழுவாய் ; தரும்-பயனிலை. 49. இடுக்கண் அழியாமை துன்பம் வந்தால் மனம் கலங்காமை. இடுக்கண் வருங்கால் நகுக அதனை அடுத்துர்வ(து) அஃதொப்ப(து) இல். (ப-உ) இடுக்கண்-துன்பம், வருங்கால்-வந்தபோது, நகுக -(துன்புருது) நீ சிரிப்பாயாக. அத்னை-அத்துன்பத்தை, அடுத்து-மேலும் மேலும் தொடர்ந்து, ஊர்வது-அடக்கித் தேய்ப்பது, அஃது-அந்த மகிழ்ச்சியை, ஒப்பது-ஒத்ததாய் உள்ள வேருென்று, இல்-இல்லை. - (க.உ) துன்பம் வந்தால் மகிழ வேண்டும்; துன்பம் தானே போகும். ஒப்பது-எழுவாய் ; இல்-பயனிலை. 50. அமைச்சு நல்ல மந்திரியின் தன்மை. தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச் சொல்லலும் வல்ல(து) அமைச்சு. 23