பக்கம்:திருக்குறள் தெளிவுரை-மூன்றாம் படிவம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(ப-உ) கடுஞ்சொல்லன்-கடுமையான சொல்லைப் பேசுபவ கைவும், கண் இலன்-கண்ணுேட்டம் இல்லாதவனுகவும், ஆயின்-(அரசன்) இருப்பானேயானுல், நெடுஞ்செல்வம்-(அவ னுடைய) பெருஞ்செல்வம், நீடு இன்றி-நீடித்து நிற்றல் இல் லாமல், ஆங்கே-அப்பொழுதே, கெடும்-அழிந்துவிடும். (க.உ) குடிகள் அஞ்சும்படி, இரக்கமின்றிப் பேசுபவ னுடைய செல்வம் அழியும். செல்வம்-எழுவாய் , கெடும்-பயனிலை. 46. ஊக்கம் உடைமை ஊக்கம் உடையவராய் இருத்தல். சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதைஅம்பிற் பட்டுப்பாடு) ஊன்றும் களிறு. (ப-உ) களிறு-யானையானது, புதை அம்பின்-புதையக் கூடிய அம்பினல், பட்டு-தாக்கப்பட்டாலும், பாடு-தன் பெரு மையை, ஊன்றும்-(தளராது) நிலைநிறுத்தும். (அதுபோல) உரவோர்-ஊக்கம் உடையவர்கள், சிதைவிடத்து-(எடுத்த காரியத்திற்கு) அழிவு வந்தபோதும், ஒல்கார்-தளரமாட் டார்கள். (க.உ) காரியம் சிதையினும், ஊக்கம் உடையவர்கள் தளர மாட்டார்கள். - - களிறு-எழுவாய் , ஊன்றும்-பயனிலை. உரவோர்-எழு வாய் ; ஒல்கார்-பயனிலை. உரவோருக்குக் களிற்றை உவமை காட்டியதால் இஃது உவமை அணி 47. மடியின்மை சோம்பல் இல்லா திருத்தல். மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான் தாஅய தெல்லாம் ஒருங்கு. (ப-உ) அடி-திருவடியால், அளந்தான்-உலகத்தை அளந்த திருமால், தாயது எல்லாம்-தாவிக் கடந்த உலகப் பரப்பு முழுவதையும், ஒருங்கு-ஒரு சேர, மடிஇலா-சோம்பல் இல்லாத, மன்னவன்-அரசன், எய்தும்-அடைவான். 22