பக்கம்:திருக்குறள் தெளிவுரை-மூன்றாம் படிவம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(க.உ) எவ்வளவு செல்வம் இருப்பினும், சோர்ந்தவனுக்குச் சுகம் இல்லை. - நன்கு-எழுவாய் ; இல்லை-பயனிலை. பொச்சாப்பு உ.ை யார்க்கு அச்சம் உடையாரை உவமை கூறியதால் இஃது உவமை அணி. 43. செங்கோன்மை நல்ல செங்கோல் ஆட்சியின் தன்மை. குடிதழிஇக் கோலோச்சும் மாநில மன்னன் அடிதழிஇ நிற்கும் உலகு. (ப-உ)குடி-தன்குடிமக்களே, தழிஇ-தழுவிக் காத்து,கோல் ஒச்சும்-செங்கோல் செலுத்துகின்ற, மாநில மன்னன்-பெரிய உலகத்தின் அரசனுடைய, அடி-திருவடிகளே, உலகு-உலகத் தார், தழிஇ நிற்கும்-(பின்பற்றி) தழுவி வாழ்வார்கள். (க.உ) செங்கோல் மன்னனையே உலகம் பின்பற்றி வாழும். உலகு-எழுவாய் ; நிற்கும்-பயனிலை. தழிஇ-உயிர் அள பெடை. . 44. கொடுங்கோன்மை கொடிய ஆட்சியின் தன்மை. அல்லற்பட்டு) ஆற்ற(து) அழுதகண் ணிரன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை. (ப-உ) செல்வத்தை-(கொடுங்கோல் மன்னனுடைய) செல்: வத்தை, தேய்க்கும் படை-அழிக்கக்கூடிய ஆயுதமாவது, அல் லல்பட்டு-(அவனால் குடிகள்) துன்பப்பட்டு, ஆற்ருது-(அத்துன் பத்தைப்) பொறுக்காமல், அழுத-அழுது சிந்திய, கண்ணிர் அன்றே-கண்ணிர் அல்லவா ? (ஆம்) l (க.உ) குடிகளின் கண்ணிர், கொடுங்கோல் மன்னனை அழிக்கும். படை-எழுவாய் ; கண்ணிர் (அன்றே)-பயனிலை. 45. வெருவந்த செய்யாமை அஞ்சக்கூடிய செயல்களைச் செய்யாமை. கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம் நீடின்றி ஆங்கே கெடும். 21