பக்கம்:திருக்குறள் தெளிவுரை-மூன்றாம் படிவம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(ப.உ) தெளிவு-(காரியத்தை ஒப்புக்கொடுக்க) நம்பிக்கை கொள்ள வேண்டுவது, அன்பு-தலைவனிடத்து அன்பும், அறிவு -நல்லதை அறியும் அறிவும், தேற்றம்-(நல்லதைச் செய் வதில்) கலங்காமையும், அவா இன்மை-(பிறர் பொருளில்) பேராசை யில்லாமையும் ஆகிய, இந்நான்கும்-இந்த நான்கு குணங்களையும், நன்கு-நன்ருக, உடையான் கட்டே-உடையவ னிடத்திலேயாகும். - (க.உ) அன்பு, அறிவு, தேற்றம், அவாவின்மை எனனும் நான்கும் உடையவனையே காரியம் செய்ய விடவேண்டும். தெளிவு-எழுவாய் ; உடையான்கட்டே-பயனிலை. 41. சுற்றம் தழாஅல் சொந்த்க்காரர்களைத் தழுவிக் காத்தல். சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வந்தான் பெற்றத்தால் பெற்ற பயன். (ப.உ) தான்-(ஒருவன்) தான், செல்வம்-செல்வத்தை, பெற்றத்தால்-அடைந்திருப்பதனால், பெற்ற-பெறத் தக்க, பயன்-ப்யனவது, சுற்றத்தால்-சொந்தக்காரர்களால், சுற்றப் பட-சுற்றி யிருக்கப்படும்படி, ஒழுகல்-(அவர்களைத் தழுவி) நடந்து கொள்ளுதலாம். (க.உ) செல்வம் பெற்றவர், சொந்தக்காரர்களைத் தழுவி ஆதரிக்க வேண்டும். பயன்-எழுவாய் ; ஒழுகல்-பயனிலை. 42. பொச்சாவாமை காரியத்தில் சோர்வு கொள்ளாமை. அச்சம் உடையார்க்(கு) அரணில்லை யாங்(கு)இல்லை பொச்சாப்(பு) உடையார்க்கு நன்கு. (ப-உ) அச்சம் உடையார்க்கு-பயப்படும் கோழைகளுக்கு, அரண்-மலை, கோட்டை முதலிய பாதுகாவல்கள், இல்லையாங்கு -பயன்படுதல் இல்லையாதலைப் போல, பொச்சாப்பு உடையார்க்கு -சோர்வு உடையவர்களுக்கு, நன்கு-(செல்வம் முதலிய) நன் மைகள், இல்லை-பயன்படுதல் இல்லை. 20