பக்கம்:திருக்குறள் தெளிவுரை-மூன்றாம் படிவம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38. இடின் அறிதல் காரியம் செய்தற்கு ஏற்ற இடத்தை அறிதல். அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை எண்ணி இடத்தால் செயின். (ப-உ) எஞ்சாமை-(காரியம் செய்வதற்குரிய வழிகளுள் ஒன்றும்) தவருமல், எண்ணி-ஆலோசித்து, இடத்தால் (எற்ற): இடத்தில் இருந்து, செயின்-செய்தால், அஞ்சாமை அல்லால்(பின்பு அது முடிவதற்கு) அஞ்சாத திண்மையைத் தவிர, துணை -வேறு துணை, வேண்டா-வேண்டியதில்லை. (க-உ) செய்யும் இடத்திற்கு எற்ற காரியத்தையே தொடங்க. வேண்டும். துணை-எழுவாய் ; வேண்டா-பயனிலை. 39. தெரிந்து தெளிதல் ஒருவரின் குணத்தை ஆராய்ந்து நம்புதல். குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல். (ப-உ) குணம் நாடி-(ஒருவரின்) குணங்களையும் ஆராய்ந்து, குற்றமும் நாடி-குற்றங்களையும் ஆராய்ந்து, அவற்றுள்-அவ் விரண்டனுள், மிகை நாடி-மிகுதியாக இருக்கும் தன்மையினைத் தெரிந்துகொண்டு, மிக்க-அம்மிகுதியானவற்றின் மூலமாக, கொளல்-(அவர் நல்லவரா கெட்டவரா என்பதை) நீ அறிந்து கொள்வாயாக. (க-உ) ஒருவருடைய குணத்தையும், குற்றத்தையும். ஆராய்ந்து, எது மிகுதியாகத் தெரிகிறதோ, அதனை உடையவ ராக அவரை முடிவு கட்டுக. - நீ-தோன்ரு எழுவாய் ; கொளல்-பயனிலை. 40. தெரிந்து வினையாடல் ஒருவரைப்பற்றி நன்ருகத் தெரிந்துகொண்ட பின்பு, - அவரைத் தொழிலில் ஈடுபடுத்துதல். அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும் நன்குடையான் கட்டே தெளிவு. 19