பக்கம்:திருக்குறள் தெளிவுரை-மூன்றாம் படிவம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(ப.உ) கருமம்-(செய்யத் தொடங்கும்) காரியங்களே, எண்ணி-(முடிக்கும் வழியை முதலிலேயே) தீர ஆராய்ந்து, துணிக-(பின்) நீ தொடங்குவாயாக. துணிந்தபின்-தொடங் கிய பின்பு, எண்ணுவம்-(முடிக்கும் வழியைப்பற்றி) ஆராய் வோம், என்பது-என்று சோர்ந்திருப்பது, இழுக்கு-தவருகும். (க.உ) எந்தக் காரியத்தையும் தீர யோசித்தே தொடங்க வேண்டும். \ நீ-தோன்ரு எழுவாய் , துணிக-பயனிலை. என்பதுஎழுவாய் இழுக்கு-பயனிலை. 36. வலியறிதல் தம் வலிமையினையும், பிறர் வலிமையினையும் அறிதல். உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி இடைக்கண் முரிந்தார் பலர். (ப-உ) உடை-உடைத்தாயிருக்கின்ற, த்ம்வலி-தமது வலி மையை, அறியார்-அறியாதவராகி, ஊக்கத்தின்_(அப்போது எற்பட்ட) மன ஊக்கத்தால், ஊக்கி-காரியத்தைத் தொடங்கி, இடைக்கண்-நடுவிலேயே, முரிந்தார்-(காரியம்) கெட்டுப்போன வர், பலர்-பலர் ஆவார். (க.உ) தம் வலிமைக்கு ஏற்ற காரியத்தையே தொடங்கிச் செய்ய வேண்டும். - முரிந்தார்-எழுவாய் ; பலர்-பயனிலை. 37. காலம் அறிதல் காரியம் செய்தற்கு ஏற்ற நேரம் அறிதல். ஞாலம் கருதினும் கைகூடும் காலம் கருதி இடத்தால் செயின். (ப.உ) காலம்-(காரியம் தொடங்குதற் கேற்ற) காலத்தை, கருதி-ஆராய்ந்து, இடத்தால்-(பொருத்தமான) இடத்திலும் இருந்து, செயின்-(அரசன்) செய்வானேயானல், ஞாலம்-உல கத்தை, கருதினும்-பெற எண்ணிலுைம், கை கூடும்-அது கைகூடி வரும். (க.உ) எக்காரியத்தையும் காலமறிந்து செய்தால் கைகூடும். அது-தோன்ரு எழுவாய் ; கைகூடும்-பயனிலை. 18