பக்கம்:திருக்குறள் தெளிவுரை-மூன்றாம் படிவம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33. பெரியாரைத் துணைக்கோடல் நல்ல பெரியாரைத் துணையாகக் கொள்ளுதல். இடிக்கும் துணையாரை ஆள்வாரை யாரே கெடுக்கும் தகைமை யவர். (ப-உ) இடிக்கும்-(தாம் குற்றம் செய்தபோது தம்மைத் திருத்துவதற்காகக்) கடிந்து பேசுகின்ற, துணையாரை-துணை யான பெரியவரை, ஆள்வாரை-தமக்கு வேண்டியவராகக் கொண்டுள்ள அரசரை, கெடுக்கும் தகைமையவர்-கெடுக்கக் கூடிய தகுதியுள்ளவர்கள், யார்-எவர் உள்ளனர் ? (ஒருவரும் இலர்.) எ-ஈற்றசை. (க.உ) திருத்தும் பெரியோரைத் துணையாகக் கொண்டிருப் பவரை, எவராலும் கெடுக்க முடியாது. தகைமையவர்-எழுவாய் , யார்-வினப்பயனிலை. 34. சிற்றினம் சேராமை இழிந்த குணமுடையவர் கூட்டத்தில் கூடாமை. மனநலம் நன்குடையர் ஆயினும் சான்றேர்க்(கு) இனநலம் ஏமாப் புடைத்து. (ப-உ) மனநலம்-மன ஒழுங்கினை, நன்கு-நன்ருக, உடை யவர் ஆயினும்-(இயற்கையாக) உடையவராக இருந்தாலும், சான்ருேர்க்கு-(அத்தகைய) பெரியோர்க்கு, இனநலம்-(தாம் கூடியுள்ள) கூட்டத்தாரின் ஒழுங்கு, எமாப்பு உடைத்து-பாது காவலாய் நிற்கும். (க-உ) இயற்கையாகவே நல்லவராய் இருப்பவர்க்கும்,சேர்க் கையும் நல்லதாய் இருக்க வேண்டும். இனநலம்-எழுவாய் , எமாப்புடைத்து-பயனிலை. 35. தெரிந்து செயல்வகை காரியங்களை ஆராய்ந்து செய்யும் திறமை. எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்ப(து) இழுக்கு. 17