பக்கம்:திருக்குறள் தெளிவுரை-மூன்றாம் படிவம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(ப.உ) எப்பொருள்-எந்தப் பொருளயும், யார் யார் வாய் -யார் யார் வாயின் மூலமாக, கேட்பினும்-கேட்டாலும், அப் பொருள்-அவ்வப் பொருளினுடைய, மெய்ப்பொருள்-உண்மை யான பயனை, காண்பது-காணவல்லதே, அறிவு-அறிவு எனப் படும். - (க.உ) எவர் வாயிலிருந்து எதைக் கேட்டாலும், அதனிடத் துள்ள உண்மைப் பயனை அறிவதே அறிவுடைமை. காண்பது-எழுவாய் அறிவு-பயனிலை. 31. இஃதும் அறிவுடைமையே சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ நன்றின்பால் உய்ப்பது அறிவு. (ப-உ) சென்ற இடத்தால்-சென்ற இடங்களில் எல்லாம், செலவிடா-(மனத்தைச் செல்லவிடாமல், தீது-திய இடத்தி னின்றும், ஒரீஇ-நீக்கி, நன்றின் பால்-நல்ல இடத்தின் கண், உய்ப்பது-செலுத்துவதே, அறிவு-(உயர்ந்த) அறிவாகும். (க.உ) மனம் போன போக்கெல்லாம் போகவிடாமல், நல்ல தில் ஈடுபடுத்துவதே அறிவிற்கு இலக்கணம். உய்ப்பது-எழுவாய் அறிவு-பயனிலை. ஒரீஇ-உயிர்அளபெடை 32. குற்றம் கடிதல் குற்றங்களைப் போக்குதல். தினத்துணையாம் குற்றம் வரினும் பனைத்துணையாக் கொள்வர் பழிநாணு வார். (ப-உ) பழி நானுவார்-பழிக்கு அஞ்சுபவர்கள், தினைத் துணை ஆம்-தினை அளவினதாகிய சிறிய, குற்றம்-குற்றச் செயல், வரினும்-(தம்மிடம்) எற்பட்டாலும், (அதனை) பனைத் துணையா-வனை யளவு பெரிதாக, கொள்வர்-கருதுவார்கள். (க.உ) பெரியோர்கள், தாங்கள் தவறிச் சிறு குற்றம் செய்து விட்டாலும் அதற்காக வருந்துவார்கள். பழிநாணுவார்-எழுவாய் ; கொள்வர்-பயனிலை. 16