பக்கம்:திருக்குறள் தெளிவுரை-மூன்றாம் படிவம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28. கல்லாமை படிக்க வேண்டிய நூற்களைப் படிக்காமை. விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல் கற்ருரோடு) ஏன யவர். (ப-உ) இலங்கு-விளங்குகின்ற (மேம்பட்ட) நூல்-புத்தகங் களே, கற்ருரோடு-படித்தவர்களோடு (ஒத்திட்டுப் பார்க்கும் போது), எனையவர்-மற்றைய படிக்காதவர்கள், விலங்கொடு மக்கள் அனையர்-மிருகங்களுக்கும் மனிதர்களுக்கும் உள்ள வேறுபாட்டை ஒத்த அளவு வேறுபாடு உடையவராகக் காணப் படுகின்ருர்கள். (க.உ) படித்தவருக்கும் படிக்காதவருக்கும் உள்ள வேறு பாடு, மனிதனுக்கும் மிருகத்திற்கும் உள்ள வேறுபாட்டைப் போன்ற அளவுடையது. - எனையவர்-எழுவாய், அனையர்-பயனிலை. 29. கேள்வி கேட்க வேண்டிய நல்ல கருத்துக்களைக் கேட்டல். கற்றிலன் ஆயினும் கேட்க அஃதொருவற்(கு) ஒற்கத்தின் ஊற்ரும். துணை. (ப-உ) கற்றிலன் ஆயினும்-(ஒருவன் படிக்க வேண்டிய புத்தகங்களைப்) படிக்காதவகை இருப்பினும், கேட்க-(படித்த வர் சொல்லும் நல்ல கருத்துக்களேயாவது) கேட்பாகை. அஃது. அக்கேள்வி, ஒருவற்கு-(அவ்) ஒருவனுக்கு, ஒற்கத்தின்தளர்ச்சிக் காலத்தில், ஊற்று ஆம்-ஊன்று கோல்போல் உத வக்கூடிய, துணை-துணையாகும். (க.உ) ஒருவன் படிக்காவிட்டாலும், பிறர் சொல்வதையா வது கேட்கவேண்டும். - ஒருவன்-தோன்ரு எழுவாய் ; கேட்க-பயனிலை. அஃதுஎழுவாய் , துணை-பயனிலை. 30. அறிவுடிைமை நல்ல அறிவு உடையவராய் இருத்தல். எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப(து) அறிவு 15