பக்கம்:திருக்குறள் தெளிவுரை-மூன்றாம் படிவம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(ப-உ) இன்ன செய்தாரை-(தனக்குத்) துன்பம் செய்தவர் களே, ஒறுத்தல்-தண்டித்தலாவது, அவர் நாண-அவர்கள் வெட்கம் அடையும்படி, நல்நயம்-நல்ல இனிய நன்மைகளே, செய்து-அவர்களுக்குச் செய்து, விடல்-(பின் அவற்றை மறந்து) விடுவதாகும். (க.உ) தமக்குத் துன்பம் செய்தவர்க்கும், தாம் இன்பமே செய்ய வேண்டும். - - ஒறுத்தல்-எழுவாய் ; செய்து விடல்-பயனிலை. 26. இறை மாட்சி அரசனது பெருந் தகுதி. முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்(கு) இறையென்று வைக்கப் படும். (ப-உ) முறை செய்து-நீதி முறைப்படிச் செங்கோல் நடாத்தி, காப்பாற்றும்-(குடிகளைக்) காப்பாற்றுகின்ற, மன்ன வன்-அரசன், மக்கட்கு-மனிதர்களுக்கு, இறை என்றுகடவுள் என்று, வைக்கப்படும்-வைத்து மதிக்கப்படுவான். (க-உ) நீதி தவருத செங்கோல் மன்னன், கடவுளாகக் கருதப்படுவான். - மன்னவன்-எழுவாய் ; வைக்கப்படும்-பயனிலை 27. கல்வி படிக்க வேண்டிய நூல்களைப் படித்தல். கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யவை. (ப-உ) ஒருவற்கு-ஒருவனுக்கு, கேடு இல்-கெடுதல் இல் லாத, விழு-உயர்ந்த, செல்வம்-செல்வமாவது, கல்வி-கல் வியே. மற்றையவை-(நிலம் நீர், வீடு வாசல் முதலிய) மற் றைய பொருள்கள் எல்லாம், மாடு அல்ல-(சிறந்த) செல்வம் அல்லவாம். - - (க.உ) ஒருவனுக்கு அழியாத செல்வம் கல்வியே. விழுச் செல்வம்-எழுவாய் ; கல்வி-பயனிலை. மற்றை யவை-எழுவாய்; மாடல்ல-பயனிலை. 14