பக்கம்:திருக்குறள் தெளிவுரை-மூன்றாம் படிவம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23. வாய்மை மெய் உடைமை. தன்னெஞ்(சு) அறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்னெஞ்சே தன்னைச் சுடும். (ப-உ) தன் நெஞ்சு-தன் மனம், அறிவது-அறிந்த ஓர் உண்மையை, பொய்யற்க-(பொய்யாக) நீ மறைக்காதே. பொய்த்த பின்-அப்படி மறைத்தால் பின்பு, தன் நெஞ்சேதன் மனமே, தன்னைச் சுடும்-(மறைத்தோமே மறைத்தோமே என்று) தன்னைச் சுட்டுத் துன்புறுத்தும். (க.உ) ஒருவன் மணமறிந்த உண்மையை மறைக்கலாகாது. நீ-தோன்ற எழுவாய்; பொய்யற்க-பயனிலை. தன் நெஞ்சே-எழுவாய் , சுடும்-பயனிலை. 24. வெகுளாமை ಡಿಹTub ೧57676TT600 நகையும் உவகையும் கொல்லும் சினத்தின் பகையும் உளவோ பிற. (ப-உ) நகையும்-முகத்தில் தோன்றும் சிரிப்பையும், உவ கையும்-மனத்தில் தோன்றும் மகிழ்ச்சியையும், கொல்லும்1ழித்துத் தோன்றுகின்ற, சினத்தின்-கோபத்தைக் காட்டி லும் (கொடிய), பிற பகையும்-வேறு பகைகளும், உளவோஒருவருக்கு உள்ளனவோ ? (இல்லை) (க.உ) ஒருவருக்குக் கொடிய பகையாவது அவரது கோபமே. பகையும்-எழுவாய் ; உளவோ-வினப்பயனிலை. 25. இன்னு செய்யாமை பிற உயிர்க்குத் துன்பம் செய்யா திருத்தல். இன்னுசெய் - தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல். 13