பக்கம்:திருக்குறள் தெளிவுரை-மூன்றாம் படிவம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாரை-இகழ்ந்து பேசும் பிறரை, நோவது-நொந்து பேசுவது, எவன்-என்? (க.உ) புகழ்ச்சியின்றி, இகழ்ச்சியாக வாழ்பவர்கள்.தம்மை நோகவேண்டுமே தவிர, பிறரை நோகக்கூடாது. நோவது-எழுவாய் , எவன்-வினப்பயனிலை. 21. கூடா ஒழுக்கம் துறவிகள் செய்யக்கூடாத தீய நடத்தை. மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்த(து) ஒழித்து விடின். (ப-உ) உலகம்-உலகத்தார்கள், பழித்தது-(துறவிகளுக் குக் கூடாது என்று) பழித்த தீய செயலே, ஒழித்துவிடின்-(துற விகள்) நீக்கிவிடுவார்களே யானல், (பின்பு) மழித்தலும்-தலை மயிரை மொட்டை யடித்தலும், நீட்டலும்-நீட்டி வளர்த்தலும் ஆகிய செயல்கள், வேண்டா-வேண்டியதில்லை. (க.உ) துறவிகளுக்கு வேடம் பெரிதன்று; ஒழுக்கமே பெரிது. மழித்தலும், நீட்டலும்-எழுவாய் ; வேண்டா-பயனிலை. 22. கள்ளாமை பிறர் உடைமையைத் திருடாமை. களவினுல் ஆகிய ஆக்கம் அளவிறந்து ஆவது போலக் கெடும். (ப.உ) களவில்ை-திருட்டினல், ஆகிய-கிடைத்த, ஆக்கம்செல்வம், அளவு இறந்து-அளவு கடந்து, ஆவதுபோலவளர்வதுபோலத் (தோன்றி) கெடும்-(பின் அளவு கடந்து) கெட்டுவிடும். . (க.உ) திருடிப் பெற்ற செல்வம் முதலில் வளர்வதுபோலத் தோன்றிலுைம், பின்பு கெட்டுவிடும். ஆக்கம்-எழுவாய் ; கெடும்-பயனிலை. 12