பக்கம்:திருக்குறள் தெளிவுரை-மூன்றாம் படிவம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'(ப-உ) கடன்-(தாம் செய்ய வேண்டிய) கடமையை, அறிஅறிந்த, காட்சியவர்-நல்லறிவுடையவர்கள், இடன்-(செல் வத்தை உதவக்கூடிய வாய்ப்பு இல்-இல்லாத, பருவத்தும்(செல்வம் சுருங்கிய) காலத்திலும், ஒப்புரவிற்கு-உதவி செய் வதற்கு, ஒல்கார்-தளரமாட்டார்கள். (க.உ) உயர்ந்தவர்கள் செல்வம் குறைந்த காலத்தும், பிறர்க்கு உதவவே பாடுபடுவார்கள். காட்சியவர்-எழுவாய் ; ஒல்கார்-பயனிலை. 19. ff6୪ଥରେ எழைக்கு இல்லை யென்னது கொடுத்தல். ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை மாற்றுவார் ஆற்றலின் பின். (ப-உ) ஆற்றுவார்-(துன்பங்களைச்) சகிக்கும் தன்மை உடைய துறவிகளின், ஆற்றல்-வல்லமையாவது, பசி ஆற்றல்-பசியைத் தாங்கிக் கொள்ளுதலாகும். (அவ்வல்லமையும்) அப்பசியைஅந்தப் பசியை, மாற்றுவார்-(உணவு தந்து) போக்கக் கூடிய உபகாரிகளின், ஆற்றலின்-வலிமைக்கு, பின்-பிற்பட்டதே யாகும். - (க.உ) பசியைத் தாங்கும் துறவிகளைக் காட்டிலும், பிறர் பசி யைப் போக்குபவர்களே வலிமை உடையவர்கள். ஆற்றல்-எழுவாய் , பசி ஆற்றல்-பயனிலை. அப்பசி ஆற் றல்-தோன்ரு எழுவாய் ; பிற்(பட்டது)-பயனிலை. 20. புகழ் பிறர் கூறும் புகழ்ச்சி. புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை இகழ்வாரை நோவ(து) எவன். (ப-உ) புகழ்பட-புகழ் உண்டாகும்படி, வாழாதார்-வாழ வகையில்லாதவர்கள், தம் நோவார்-(அக்குறைக்காகத்) தங் களே நொந்து கொள்ளாதவராகி, தம்மை-தங்களே, இகழ் 11