பக்கம்:திருக்குறள் தெளிவுரை-மூன்றாம் படிவம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. பயனில சொல்லாமை பயன்தராத பேச்சுக்களைப் பேசாதிருத்தல். சொல்லுக் சொல்லின் பயனுடைய சொல்லற்க சொல்லில் பயன்இலாச் சொல். (ப.உ) சொல்லின்-சொல்லுவாயே யால்ை, பயன் உடைய பயன் தரக்கூடிய சொற்களையே, சொல்லுக-நீ சொல்லுவா யாக சொல்லில்-சொற்களுக்குள்ளே, பயன் இலா-பயன் தராத, சொல்-சொற்களே, சொல்லற்க-நீ சொல்லாதே. (க.உ) பயன்தரக்கூடிய பேச்சுக்களையே பேச வேண்டும். நீ-தோன்ற எழுவாய் சொல்லுக, சொல்லற்க-பய னிலைகள். 17. தீவினை அச்சம் கெட்ட காரியங்களைச் செய்யப் பயப்படுதல். தன்னைத்தான் காதலன் ஆயின் எனத்தொன்றும் துன்னற்க திவினைப் பால். (ப-உ) (ஒருவன்) தன்னைத்தான்-தன்னைத்தானே, காத லன் ஆயின்-(நன்ருய் இருக்கவேண்டும்என்று) விரும்புவானே யானல், தீவினைப்பால்-கெட்ட காரியப் பகுதியாகிய செயல் களுக்குள், எனைத்து-எவ்வளவு சிறிய, ஒன்றும்-ஒரு காரியத் தையும், துன்னற்க-நெருங்கிச் செய்யாமல் இருப்பானுக. (க.உ) ஒருவன், தான் நன்றக இருக்க வேண்டுமானல், சிறிதளவு தீமையும் செய்யலாகாது. ஒருவன்-தோன்ரு எழுவாய் , துன்னற்க-பயனிலை. 18. ஒப்புரவு அறிதல் ഉഒക്റ്റ്) உணர்ந்து உதவி செய்தலை அறிதல். இடன்இல் பருவத்தும் ஒப்புரவிற்கு) ஒல்கார் கடன்அறி காட்சி யவர். 10