பக்கம்:திருக்குறள் தெளிவுரை-மூன்றாம் படிவம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(க.உ) பிறர் செய்த குற்றத்தைப் பொறுப்பதும், மறப்ப தும் ஒன்றற்கு ஒன்று உயர்ந்தனவாகும். மறத்தல்-எழுவாய் ; நன்று-பயனில்ை. 14. வெஃகாமை பிறர் பொருளைக் கவர நினையாமை. இலம்என்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற புன்மைஇல் காட்சி யவர். (ப-உ) புலம்-(சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற ஐந்து) புலன்களையும், வென்ற-(அடக்கி) வென்ற, புன்மை இல் -குற்றம் இல்லாத, காட்சியவர்-நல்லறிவு உடையவர்கள், இலம் என்று-(யாங்கள் வறுமையால்) இல்லாதவர்கள் என்று, வெஃகுதல்-(பிறர் பொருளைக்) கவருதலை, செய்யார்-செய்ய மாட்டார்கள். (க.உ) ஆசையை அடக்கியவர்கள வறியவராயினும், பிறர் பொருளைக் கவரமாட்டார்கள். காட்சியவர்-எழுவாய் ; செய்யார்-பயனிலை. 15. புறங்கூருமை இல்லாத விடத்துப் பிறரை இகழ்ந்து கோள் சொல்லாமை. கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க முன்னின்று பின்நோக்காச் சொல். (ப-உ) கண்நின்று-(ஒருவனுடைய) கண் எதிரே நின்று கொண்டு, கண்அற-கண்ணுேட்டம் இல்லாமல், சொல்லினும். (அவனைப்பற்றிக் கொடுமையாகப்) பேசினலும், முன் இன்றுஅவன் முன்னல் இல்லாமல், பின்-அவனுக்குப் பின்னே, நோக்கா-அவன் கண்டறியாத, சொல்-பழிச்சொற்களை, சொல் லற்க-(புறங்கூறி) நீ பேசாதே. (க.உ) ஒருவன் எதிரே பழிச்சொல் சொன்னலும், இல்லாத விடத்துப் புறங்கூறல் ஆகாது. d நீ-தோன்ரு எழுவாய் ; சொல்லற்க-பயனிலை. 9