பக்கம்:திருக்குறள் தெளிவுரை-மூன்றாம் படிவம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(ப.உ) யா-(காக்கவேண்டிய) வேறு எவற்றையாவது, காவார் ஆயினும்-காத்து அடக்காமல் விடுவாராயினும், நா(துடுக்கான) நாக்கை, காக்க-(மக்கள்) காத்து அடக்குவாராக. காவாக்கால்-அப்படிக் காக்காவிட்டால், சொல் இழுக்கு-சொல் குற்றத்தின்கண், பட்டு-அகப்பட்டு, சோகாப்பர்-(அன்னேர்) துன்புறுவர். (க.உ) நாவை அடக்கி நல்ல பேச்சுப் பேசாதவர் துன்பப் 'படுவர். நாகாவார்-தோன்ரு எழுவாய் ; சோகாப்பர்-பயனிலை. 12. ஒழுக்கம் உடைமை நல்லொழுக்கம் உடையவராய் இருத்தல். உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பல்கற்றும் கல்லார் அறிவிலா தார். உலகத்தோடு-(உயர்ந்தோர் எற்படுத்திய) உலக ஒழுக்கத் தோடு, ஒட்ட-பொருந்த, ஒழுகல்-ஒழுகுவதை, கல்லார்-அறி யாதவர்கள், பல கற்றும்-பல நூல்களையும் கற்றிருந்தாலும், அறிவிலாதார்-அறிவு இல்லாதவரே யாவார்கள். (க.உ) உயர்ந்த உலக ஒழுக்கம் தெரியாதவர்கள் கற்றிருந் தாலும் கல்லாதவராகவே கருதப்படுவார்கள். கல்லார்-எழுவாய் , அறிவிலாதார்-பயனிலை. 13. பொறை உடிைமை பொறுமை உடையவராய் இருத்தல். பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை மறத்தல் அதனினும் நன்று. (ப-உ) இறப்பினை-(பிறர் செய்த) மிக்க குற்றத்தினை, என் ஆறும்-எப்போதும், பொறுத்தல்-பொறுத்துக்கொள்வாயாக. அதனை-அம்மிக்க குற்றத்தினை, மறத்தல்-அறவே மறந்து விடுதல், அதனினும்-அப்பொறையைக் காட்டிலும், நன்றுமிக நல்லதாகும்.