பக்கம்:திருக்குறள் தெளிவுரை-மூன்றாம் படிவம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. செய்ந்நன்றி அறிதல் தமக்குப் பிறர் செய்த நன்மையை மறவாமை. செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது. (ப-உ) செய்யாமல்-(தான் பிறர்க்கு உதவி) செய்யாம் லேயே, செய்த-(பிறர் தனக்குச் செய்த, உதவிக்கு-உபகாரத் திற்கு, வையகமும்-மண்ணுலகமும், வானகமும்-விண்ணுலக முங்கூட,ஆற்றல்-(பதில் உதவிக்காக)ஒத்தல், அரிது-முடியாது. (க.உ) செய்யாமல் செய்த உதவி, மண்ணுலக, விண்ணுல கங்களினும் உயர்ந்ததாகும். ஆற்றல்-எழுவாய் , அரிது-பயனிலை. 10. நடுவு நிலைமை எல்லோர்க்கும் பொதுவாக நடக்கும் தன்மை. நன்றே தரினும் நடுஇகந்தாம் ஆக்கத்தை அன்றே ஒழிய விடல். . (ப-உ) நன்றே-நன்மையின்ையே, தரினும்-தருவதாய் இருந்தாலும், நடு-நடுவு நிலைமையை, இகந்து-கடப்பதால், ஆம்-உண்டாகும், ஆக்கத்தை-செல்வத்தை, அன்றே-அப் பொழுதே, ஒழிய-நீங்கும்படி, விடல்-நீ விட்டுவிடுக. (க.உ) நடுவுநிலைமை தவறி வரும் செல்வத்தை அப் பொழுதே விட்டுவிட வேண்டும். நீ-தோன்ரு எழுவாய் ; விடல்-பயனிலை. விடல்-அல் விகுதி ஏற்ற வியங்கோள் வினைமுற்று. 11. அடக்கம் உடைமை அடக்கம் உடையவராய் இருத்தல். யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்இழுக்குப் பட்டு. 7