பக்கம்:திருக்குறள் தெளிவுரை-மூன்றாம் படிவம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. விருந்தோம்பல் தம்மிடம் வந்த விருந்தினரை உபசரித்தல். மோப்பக் குழையும் அனிச்சம் முகம்திரிந்து நோக்கக் குழையும் விருந்து. (ப-உ) அனிச்சம்-அனிச்சம் என்னும் பூ, மோப்ப-மோந்த அளவிலேயே, குழையும்-வாடிவிடும். (அதுபோல) விருந்துவிருந்தினர், முகம் திரிந்து-(வீட்டினர்) முகம் வேறுபட்டு, நோக்க-நோக்கிய அளவிலேயே, குழையும்-மனம் வாடுவர். (க.உ) விருந்தினரைக் கடுமையாக நோக்கி வாடச் செய்ய லாகாது. அனிச்சம்-எழுவாய் ; குழையும்-பயனிலை. விருந்துஎழுவாய் ; குழையும்-பயனிலை. விருந்தினர்க்கு அனிச்சத்தை உவமையாகக் கூறியதால் இஃது உவமை யணி. 8. இனியவை கூறல் இனிமையான சொற்களைப் பேசுதல். இனிய உளவாக இன்னத கூறல் கணியிருப்பக் காய்கவர்ந் தற்று. (ப-உ) இனிய-இனிமையான சொற்கள், உளவாகஇருக்க (அவற்றை விட்டு) இன்னத-இனிமை யில்லாத சொற் களே, கூறல்-ஒருவன் பேசுதல், கனி-(இனிப்புள்ள) பழங்கள், இருப்ப-இருக்க, (அவற்றைவிட்டு) காய்-(இனிமையில்லாத) காய்களே, கவர்ந்த அற்று-கவர்ந்து தின்னும் அச்செயலோடு ஒக்கும். - (க.உ) கடுஞ்சொற்களை நீக்கி, இன்சொற்களைப் பேசவேண் டும். 5p6–67@ad; கவர்ந்தற்று-பயனிலை. இன்சொல்லுக் குக் கனியையும், கடுஞ்சொல்லுக்குக் காயையும் உவமை கூறிய தால் இஃது உவமை அணி.