பக்கம்:திருக்குறள் தெளிவுரை-மூன்றாம் படிவம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. மக்கள் பேறு 566) ೧.ಒ76,75 பெறும் பேறு. தந்தை மகற்கு ஆற்றும் நன்றி அவையத்து முந்தி யிருப்பச் செயல். (ப-உ) தந்தை-தகப்பன், மகற்கு-தன் மகனுக்கு, ஆற்றும்-செய்யவேண்டிய, நன்றி-உதவி (என்னவென்றல்), அவையத்து-(படித்தவர் நிறைந்த) சபையில், முந்தி-முதன் மையாய், இருப்ப-இருக்கும்படி, செயல்-(கல்விகற்கச்) செய்த லாம். - - (க.உ) தந்தை மகனுக்குச் செய்யவேண்டிய உதவி, கற்றேர் சபையில் முதல்வகுைம்படிக் கல்வி கற்பித்தலாம். நன்றி-எழுவாய் ; செயல்-பயனிலை. 6. அன்புடைமை எல்லோரிடத்தும் அன்பு வைத்தல். அறத்திற்கே அன்புசார்(பு) என்ப அறியார் மறத்திற்கும் அஃதே துணை. - (ப-உ) அறியார்-தெரியாதவர்கள், அறத்திற்கே-அறம் செய்வதற்கு மட்டுமே, அன்புசார்பு-அன்பு துணையாகும், என்ப. -என்று சொல்வார்கள். மறத்திற்கும்-(குற்றம் செய்தவரைத் / திருத்துவதற்காகத்) தண்டிக்கும் செயலுக்கும், அஃதேசஅந்த அன்பே, துணை-துணையாகும். (க-உ) தருமம் செய்வதற்கும், குற்றவாளிகளைத் திருத்து வதற்காகத் தண்டிப்பதற்கும் காரணம் அவர்கள்மேல் உள்ள அன்பே. அறியார்-எழுவாய் , என்ப-பயனிலை. அஃதே-எழு வாய் , துணை-பயனிலை.