பக்கம்:திருக்குறள் தெளிவுரை-மூன்றாம் படிவம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. அறன் வலியுறுத்தல் தருமத்தின் கட்டாயத்தை வற்புறுத்துதல். மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் ஆகுல நீர பிற. (ப.உ) மனத்துக்கண்-மனத்திலே, மாசு-குற்றம், இலன்இல்லாதவனுக, ஆதல்-ஆகுதலே, அனைத்து அறன்-எல்லா அறமும் ஆகும். பிற-(மனத்தில் அழுக்கு வைத்துக்கொண்டு செய்யும்) பிற செயல்கள் எல்லாம், ஆகுலம்-ஆரவாரமான, நீர-தன்மையை உடையனவாம். (க.உ) மனத்தில் வஞ்சகம் இன்றிச் செய்யும் காரியங்களே அறமாகும். ஆதல்-எழுவாய் , அறன்-பயனிலை. பிற-எழுவாய் ; ஆகுலநீர-பயனிலை. . 4. இல்வாழ்க்கை கணவன் மனைவியுடன் வீட்டில் இருந்து நடாத்தும் குடும்ப வாழ்க்கை. . அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது. . (ப-உ) இல்வாழ்க்கை-(ஒருவனுடைய) இல்லற வாழ்க்கை யானது, அன்பும்-அன்பினையும், அறமும்-தருமச் செயலினை யும், உடைத்தாயின்-உடையதாய் இருக்குமேயானல், பண்பும்(அவ்வில்வாழ்க்கையின்) இலக்கணமும், பயனும்-நன்மையும், அது-(அந்த அன்பும் அறமும் உடைத்தா யிருக்கின்ற) அச் செயலே. - (க.உ) எல்லோரிடத்தும் அன்பு பூண்டு அறம் செய்வதே இல்வாழ்க்கையின் பண்பும், பயனும் ஆகும். பண்பும் பயனும்-எழுவாய் ; அது-பயனிலை. 4人 -