பக்கம்:திருக்குறள் தெளிவுரை-மூன்றாம் படிவம்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவுரை 1. கடவுள் வாழ்த்து எல்லாம் வல்ல கடவுளே வாழ்த்துதல். மலர்மிசை ஏகினுன் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார். (பதஉரை) மலர்மிசை-(அன்பர்களின் மனமாகிய தாமரை) மலரின்மேல், எகின்ை-சென்றிருக்கும் கடவுளுடைய, மாண்மாட்சிமைப்பட்ட, அடி-திருவடியை, சேர்ந்தார்-இடைவிடாது நினைப்பவர்கள், நிலமிசை-நிலத்தின்மேல், நீடு-(நீண்ட இன் பங்களுடன்) நீண்டகாலம், வாழ்வார்-வாழ்வார்கள். (கருத்துஉரை) கடவுளே வழிபடுபவர்கள் ஆயுள் முதலிய நலங்கள் நீட்டிக்க வாழ்வார்கள். சேர்ந்தார்-எழுவாய் ; வாழ்வார்-பயனிலை. 2. நீத்தார் பெருமை பற்றுக்களைத் துறந்த பெரியார்களின் பெருமையைக் கூறுவது. செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கரிய செய்கலா தார். (L-ഉ) செயற்கு-(எல்லோரும்) செய்வதற்கு, அரியஅருமையான காரியங்களை, செய்வார்-செய்ய முடிந்தவர்களே, பெரியர்-பெரியவராவார்கள். செயற்கு-செய்வதற்கு, அரியஅருமையான காரியங்களை, செய்கலாதார்-செய்ய முடியாத வர்கள், சிறியர்-சிறியவரேயாவார்கள். - (க.உ) எல்லோராலும் செய்ய முடியாத சிறந்த காரியங் களைச் செய்பவரே பெரியவர் ; அல்லாதவர் சிறியவர். செய்வார்-எழுவாய் , பெரியர்-பயனிலை. செய்கலாதார்எழுவாய் ; சிறியர்-பயனிலை. அரிய-குறிப்பு வினையாலணையும் பெயர்.