பக்கம்:திருக்குறள் தெளிவுரை.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவுரை பொருள் சான்றாண்மை (நிறை குணம்) கடமை அறிந்து நிறைகுணம் கொண்டவர்க்கு நல்லவை எல்லாமே கடமைகள் என்பர். 981 நற்குணமே பெரியவர்தம் நலம், பிறநலங்கள் அவர்க்கு ஒரு நலமும் இல்லை. 982 அன்பு நாணம் பொதுநலம் இரக்கம் வாய்மை ஐந்தும் சால்புக் கட்டடத்தின் துண்கள். 983 ஒருயிரையும் கொல்லாமை தவமாகும்; யாரையும் குறைகூறாமை சால்பாகும். 984 வலியார்க்கு வலியாவது தாழ்ந்து போதல்; - அதுவே சான்றோர் பகைவரைத் திருத்தும்படை. 985 நிறைகுணத்தை மதிப்பிடும் உரைகல் யாது? தோல்வியைத் தாழ்ந்தவரிடத்தும் ஏற்பது. 986 துன்பம் செய்தவருக்கும் இன்பம் செய்யாவிடின் நிறைகுணத்துக்கு என்ன பொருள்? 987 சால்பாகிய உறுதிமாத்திரம் இருக்குமானால் வறுமை ஒருவர்க்கு இழிவாகாது. 988 நிறைகுணம் என்னும் கடலுக்குக் கரையானவர் காலம் பிறழ்ந்தாலும் தாம் ஒழுக்கம் பிறழார். 989 நிறைந்தவர் நிறைகுணம் குறைந்தால் . . நிலம் பாரம் பொறுக்குமா? 990 200 குடியியல் அதிகாரம் 99 சான்றாண்மை கடன்என்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்து சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு 981 குணநலம் சான்றோர் நலனே பிறநலம் எந்நலத்து உள்ளது.உம் அன்று. 982 அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு ஐந்துச்ால்பு ஊன்றிய தூண். 983. கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை சொல்லா நலத்தது சால்பு. 984 ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர் மாற்றாரை மாற்றும் படை 985 சால்பிற்குக் கட்டளை யாதெனில் தோல்வி துலையல்லார் கண்ணும் கொளல். 986 இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்ன பயத்ததோ சால்பு. - 987 இன்மை ஒருவற்கு இளிவன்று சால்பென்னும் திண்மைஉண் டாகப் பெறின். 988 ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு ஆழி எனப்படு வார். 989 சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான் தாங்காது மன்னோ பொறை. 990 20.1 14.