பக்கம்:திருக்குறள் தெளிவுரை.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவுரை பொருள் நானுடைமை (வெட்கம்) வெட்கம் என்பது தீயசெயலுக்கு நாணுதல்; பெண்களின் வெட்கம் வேறுவகை. 1011 உணவு உடை பின்வழி எல்லார்க்கும் பொது: வெட்கமே நன்மக்களின் சிறப்பு. 1 G12 உயிரெல்லாம் உடம்பைப்பற்றி நிற்கின்றன; நிறைகுணம் வெட்கத்தைப்பற்றி நிற்கின்றது. 1018 பெரியவர்கட்கு வெட்கம் ஓர் அழகாகும்; - வெட்கமில்லாத வீறுநடை நோயாகும். 1014 பிறர்பழிக்கும் தம்பழிக்கும் நாணுபவரை வெட்கத்தின் வாழ்விடமென உலகுபோற்றும். 1015 நாணாகிய வேலியை அமைத்துக் கொண்டன்றி உயர்ந்தோர் உலகத்தை மதியார்கள். 1 0 || 6 நாணம் மிக்கவர் அதற்காக உயிர்விடுவர்; உயிருக்காக நானத்தை விடார். 1017 பிறர் வெட்கப்படுதற்குத் தான்வெட்கப் படாவிடின் அவன் செயலுக்கு அறம் வெட்கப்படும். 1018 கொள்கை தவறினால் குடி அழியும்; நாணம் கெட்டால் நன்மை கெடும். 1 019 நாணம் இல்லாதாரின் நடமாட்டம் மரப்பாவை கயிற்றால் நடமாடியது போலும். 102.0 206 குடியியல் o அதிகாரம் 102 நாணுடைமை கருமத்தால் நாணுதல் நானுத் திருநுதல் நல்லவர் நாணுப் பிற. 1011 ஊனுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல நானுடைமை மாந்தர் சிறப்பு. ஊனைக் குறித்த,உயிரெல்லாம் நாண் என்னும் நன்மை குறித்தது சால்பு. 1013 அணிஅன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல் பிணிஅன்றோ பீடு நடை 1014 பிறர்பழியும் தம்பழியும் நானுவார் நானுக்கு உறைபதி என்னும் உலகு. 1015 நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம் பேணலர் மேலா யவர். 1016 நானால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால் நாண்துறவார் நாண்ஆள் பவர். | 1017 பிறர்நாணத் தக்கது தான்நானா னாயின் அறம்நாணத் தக்கது உடைத்து. 1018 குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும் நாணின்மை நின்றக் கடை 1019 நாண்அகத் தில்லார் இயக்கம் மரப்பாவை நாணால் உயிர்மருட்டி யற்று. - 1020 2O7