பக்கம்:திருக்குறள் தெளிவுரை.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவுரை பொருள் உழவு -೧ುಹು. முன்னேறினாலும் உழவுக்குப் பின்னே: துயரப் பட்டாலும் உழவே தலைத்தொழில். 1031 உழ அஞ்சி ஒடுவாரைத் தாங்குதலால் உழவரே எல்லார்க்கும் அச்சாணி ஆவர். 1032 உழுது உண்டு வாழ்பவரே உரிமையாளர்; பிறரெல்லாம் உழவரைத்தொழும் அடிமைகள். 1033 நெற்கதிரின் நிழலில் வாழும் உழவர்கள் பலரையும் தம் அரசனுக்குக் கீழ்ப்படுத்துவர். 1034 உழுதுண்ணும் உழவர் பிச்சை எடுக்கார்; பிச்சைக்காரர்களுக்கு ஒளிக்காது கொடுப்பர். 1035 உழவர்கள் வேலைநிறுத்தம் செய்வாராயின் துறவிகட்கும் பற்றுக்கோடு இல்லை. 1036 பலப்புழுதியைக் காற்புழுதியாகக் காயவிடின் பிடியளவு உரமின்றியும் நிலம் நன்கு விளையும்.1037 உழுதல் உரமிடல் களைபறித்தல் நீர்பாய்ச்சல் காத்தல் ஒன்றைவிட ஒன்று நல்லது. 1038 உடையவன் வயலுக்கு நாளும் போகாதிருப்பின் வயல் மனைவிபோலப் பிணங்கி வாடும். 1039 ஏழை என்று சோம்பியிருப்பாரைக் கண்டால் நிலமகள் சிரிப்பாள். 1040 210 குடியியல் அதிகாரம் 104 உழவு சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை. 1031 உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது எழுவாரை எல்லாம் பொறுத்து. - 1032 உழுதுண்டு வாழ்வரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர். 1033 பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர் அலகுடை நீழ லவர். . 1034 இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் கரவாது கைசெய்துண் மாலை யவர். - {035 உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதுஉம் விட்டேம்என் பார்க்கும் நிலை. - 1036 தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும் வேண்டாது சாலப் படும். °, 1037 ஏரினும் நன்றால் எருஇடுதல் கட்டபின் நீரினும் நன்றதன் காப்பு 1038 செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து இல்லாளின் ஊடி விடும். 1039 இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின் நிலமென்னும் நல்லாள் நகும். 1040 211