பக்கம்:திருக்குறள் தெளிவுரை.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவுரை இரவு (பிச்சை) கேட்கத் தக்கவரிடம் உதவி கேட்க: ஒளித்தால் அவர்க்குப் பழி, உனக்கு இல்லை. கேட்ட பொருள்கள் கடினமின்றிக் கிடைப்பின் உதவி கேட்பதும் மகிழ்ச்சியைத் தரும். ஒளிக்காத மனமும் கடமையுணர்ச்சியும் உடையவர் முன்நின்று இரத்தலும் ஓர் அழகு. ஒளிப்பதைக் கனவிலும் அறியாதாரிடம் சென்று கேட்பது கொடுப்பதை ஒக்கும். நேர்நின்று ஒருவர் இரக்க முற்படுவது ஒளிக்காதவர் உலகத்து இருப்பதால் அன்றோ? ஒளிக்கும் துயரம் இல்லாரைக் கண்டால் வறுமைத் துயரம் எல்லாம் போய்விடும். இகழ்ந்து பேசாது கொடுப்பாரைக் கண்டால் உள்ளம் உள்ளுக்குள்ளே மகிழும். உதவிகேட்பார் இல்லாவிடின் இப்பேருலகம் மரப்பாவைபோல உணர்ச்சியற்று நடக்கும். இரந்து கொள்ள விரும்புவோர் இல்லாதபோது' கொடுப்பவர்க்குப் பெருமிதம் என்ன உண்டு? இரப்பவனுக்குக் கோபம் வருதல் கூடாது; தான் வறுமைப்படுவதே அதற்குச் சான்று. 214 பொருள் 1051 I 052 I Q S3 1054 105.5 1056 1057 1058 1059 1060 குடியியல் அதிகாரம் 106 - இரவு இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின் அவர்பழி தம்பழி யன்று. 1051 இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை துன்பம் உறாஅ வரின். 1052 கரப்பிலா நெஞ்சின் கடனறிவார் முன்நின்று இரப்புமோ ரேனர் உடைத்து. 105 இரத்தலும் ஈதலே போலும் கரத்தல் கனவிலும் தேற்றாதார் மாட்டு. 1054 கரப்பிலார் வையகத்து உண்மையால் கண்ணின்று இரப்பவர் மேற்கொள் வது. 1055 கரப்பிடும்பை இல்லாரைக் காணின் நிரப்பிடும்பை எல்லாம் ஒருங்கு கெடும். t 1056 இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம் உள்ளுள் உவப்பது உடைத்து. 1057 இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம் மரப்பாவை சென்றுவந் தற்று. 1058 ஈவார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள் மேவார் இலாஅக் கடை 10 இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரம்பிடும்பை தானேயும் சாலும் கரி. 215