பக்கம்:திருக்குறள் தெளிவுரை.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவுரை இன்பம் கண் விதுப்பழிதல் தீராத நோயைக் கண்காட்ட நான் பெற்றேன்; நோய் தந்த கண் இப்போதுஏன் அழுகின்றன; 111 அன்று ஆராயாது அவரை நோக்கிய கண்கள் இன்று பொறுக்காமல் துன்பப் படுவது ஏன்? 1172 அன்று விரைந்து பார்த்தன. இன்று அழுகின்றன: இது கேலிக்கு உரியது. l, 173 தப்ப முடியாத நோயை எனக்குத் தந்து விட்டுக் கண்கள் இனி அழமுடியாமல் வறண்டன. i 174 கடலினும் பெரிய காமம் தந்த என் கண்கள் தூங்கமுடியாது துன்பப் படுகின்றன. 1 175 எனக்கு இத்துன்பம் தந்த கண்கள் தாமும் அத்துன்பப் படுவது எவ்வளவோ மகிழ்ச்சி. | 176 விரும்பி உருகிக் காதலரைக் கண்ட கண்கள் வருந்தி வருந்தி வறண்டு போகட்டும். 1177 மனமின்றியே காதலித்தார் ஒருவர் உளர். அவரைப் பாராது கண்கள் தூங்கா. i 178 அவர் வாராவிடினும் தூங்கா வரினும் தூங்கா: இருநிலையிலும் கண்கள் பெருந்துயர்ப்பட்டன. 1179 பறைபோலும் கண்ணுடைய மகளிரிடமிருந்து மறைவை ஊரார் அறிதல் கடினமில்லை. 1 1 80 240 கற்பியல் - அதிகாரம் 118 கண்விதுப்பழிதல் கண்தாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய் தாம்காட்ட யாம்கண் டது. 1171 தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப் பைதல் உழப்பது எவன். 竹72 கதுமெனத் தாம்நோக்கித் தாமே கலுழும் இதுநகத் தக்கது உடைத்து. 1173 பெயலாற்றா நீருலந்த உண்கண் உயலாற்றா உய்வில்நோய் என்கண் நிறுத்து. 甘74 படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றாக் காமநோய் செய்தஎன் கண். 甘75 ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண் - தாஅம் இதற்பட் டது. 廿76 உழந்துழந்து உள்நீர் அறுத விழைந்திழைந்து வேண்டி யவர்க்கண்ட கண். 1177 பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க் காணாது அமைவில கண். 178 வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை ஆரஞர் உற்றன கண். * 1179 மறைபெறல் ஊரார்க்கு அரிதன்றால் எம்போல் அறைபறை கண்ணா ரகத்து. 1180 24.1