பக்கம்:திருக்குறள் தெளிவுரை.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவுரை இல்வாழ்க்கை இல்லறத்தான் மரபான மூவேந்தர்க்கும் நல்லாட்சிக்கு உற்ற துணையாவான். துறவிக்கும் வறியவர்க்கும் நிலைதிரிந்தவர்க்கும் இல்லறத்தானே துணைவன். தென்புலத்தார் நிலத்தெய்வம் விருந்து சுற்றம் தன்குடும்பம் என்ற ஐவகையையும் காக்க பழியஞ்சிப் பகுத்துண்ணும் இல்லறத்தானுக்கு வாழ்வு குறையாது; வழியும் நில்லாது. அன்பும் அறனும் உடைய குடும்பம் நாகரிகமும் நலமும் பெற்று விளங்கும். அறத்தின்படி குடும்பம் நடத்தினால் அதனைத் துறந்துபோய்ப் பெறுவது என்ன? இயல்பாகக் குடும்ப வாழ்வு வாழ்பவன் முன்னேற முயல்வார் எல்லாரினும் சிறந்தவன். பிறரை நெறிப்படுத்தித் தானும் நெறிநிற்கும் இல்வாழ்வே தவத்தினும் ஆற்றல் உடையது. அறமென்று உறுதிப்பட்டது குடும்ப வாழ்வே: துறவும் பழியில்லா விட்டால் அறமாகும். உலகத்தில் மணந்து முறையாக வாழ்பவன் மேலுலகத் தேவராக மதிக்கப்படுவான். - i () அறம் 4 I 42 43 44 45 46 47 48 49 5 () இல்லறவியல் அதிகாரம் 5 இல்வாழ்க்கை இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை. 44 றந்தார்க்கும் துவ்வா. தவர்க்கும் இறந்தார்க்கும் ಫ್ಲಿ! என்பான் துணை. 42. தென்புலத்தர் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு ஐமபுலததாறு ஓமபல தலை. 43 பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல், 44 அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது. 45 அறத்தாற்றின் இல்வாழ்க்கை யாற்றின் புறத்தாற்றிற் போஒய்ப் பெறுவது எவன். 46 இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் முயல்வாருள் எல்லாம் தலை. 47 ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை நோற்பாரின் நோன்மை உடைத்து. 48 அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும் பிறன்பழிப்பது இல்லாயின் நன்று. 49 வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும். 50 11